உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு எம்.எல்.சி., பதவிக்கு ஜூலை 12ல் இடைத்தேர்தல்

ஒரு எம்.எல்.சி., பதவிக்கு ஜூலை 12ல் இடைத்தேர்தல்

பெங்களூரு, : முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா செய்ததால் காலியான ஒரு எம்.எல்.சி., பதவிக்கு, ஜூலை 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.அதிருப்தி அடைந்து காங்கிரசில் இணைந்து, ஹுப்பள்ளி - தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால், கடந்தாண்டு அவருக்கு காங்கிரஸ் சார்பில், எம்.எல்.சி., பதவி வழங்கப்பட்டது.ஆனாலும், பா.ஜ.,வில் இருப்பதையே அவர் விரும்பினார். இதனால், எம்.எல்.சி., பதவியை, 2024 ஜனவரி 25ம் தேதி, ராஜினாமா செய்தார். பின், பா.ஜ.,வில் இணைந்தார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பெலகாவி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். காலியாக உள்ள ஒரு எம்.எல்.சி., பதவிக்கு, ஜூலை 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என மத்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.வரும் 25ம் தேதி, வேட்புமனுத் தாக்கல் துவங்கும். மனுத்தாக்கல் திரும்ப பெறுவதற்கு, ஜூலை 2ம் தேதி, கடைசி நாள். 3ம் தேதி மனுக்கள் பரிசீலனை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, 5ம் தேதி கடைசி நாள்.எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்யப்படும் தேர்தல் ஆகும். ஒரு பதவி என்பதால், ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு கிடைப்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்