மேலும் செய்திகள்
ஆவணி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
17-Aug-2024
சபரிமலை:சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடங்கின. நேற்று மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்.13 ல் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்ம தத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவோண சிறப்பு பூஜைகள் தொடங்கின.கேரளாவில் தலை ஓணம் என்று அழைக்கப்படும் உத்திராட ஓணத்தையொட்டி மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இன்று திருவோணம் நாளில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படுகிறது. நாளை போலீஸ் துறை சார்பில் வழங்கப்படும். அத்தப் பூக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஐயப்பன் விக்ரகத்தில் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து பூஜைகள் நடக்கிறது.திருவோண பூஜைகளுக்கு பின்னர் தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைகளும் நடைபெற்று செப்.,22 இரவில் நடை அடைக்கப்படும்.சபரிமலையில் பக்தர்களின் சார்பில் களபாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இதற்காக அரைத்த சந்தனம் வெளியில் இருந்தே இதுவரை கொண்டுவரப்பட்டது. தற்போது தேவசம்போர்டு சார்பில் சந்தனம் அரைக்கும் இயந்திரம் சபரிமலையில் நிறுவப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.
17-Aug-2024