மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு : சிறுவனின் மொபைல் போன் விளையாட்டை பயன்படுத்தி, பணம், தங்க நகைகளை பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். “குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்,” என, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அறிவுறுத்தினார்.இதுதொடர்பாக பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் திருமலை. ஐடியல் ஹோம் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆன்லைன் மோகம்
பள்ளியில் படித்து வரும் தனது மகனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார். பப்ஜி, டிரீம் 11 போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் மகன் ஈர்க்கப்பட்டார். இதை பார்த்த அவருடன் படிக்கும் இரு மாணவர்கள், 'ஆன்லைனில் விளையாடுவது பற்றி, உன் பெற்றோரிடம் கூறுவோம்' என கூறினர்.அச்சமடைந்த மாணவர், பணம் தருவதாக கூறியுள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட நண்பர்களும் அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியுள்ளனர்.ஒரு கட்டத்தில் பணம் இல்லை என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும், வீட்டில் இருந்து தங்க நகைகளை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். மாணவரும், வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் தங்க நகைகளை கொண்டு வந்து, நண்பர்களிடம் கொடுத்துள்ளார். இது போன்று 600 முதல் 700 கிராம் தங்க நகைகள் கொடுத்துஉள்ளார். தொடர்ந்து சிறுவனை மிரட்டி வந்ததால், தனது தந்தையிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவரது தந்தை திருமலை, ராஜராஜேஸ்வரி நகர் போலீசில் புகார் செய்தார். நான்கு வாலிபர்கள்
மாணவரின் இரு நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர். தங்க நகைகளை வாங்கிய கங்காவதியை சேர்ந்த இருவர், கெங்கேரியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளோம். இவர்களுக்கு 25 - 28 வயது.இவர்களிடம் இருந்து 23.50 லட்சம் ரூபாய் ரொக்கம் உட்பட 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டு, விசாரித்து வருகிறோம். மாணவரின் இரு நண்பர்களும் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுக்கும் பெற்றோர், அவர்களை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7