மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
மயூர் விஹார்: கிழக்கு டில்லியின் மயூர் விஹாரில் உள்ள நகைக் கடைகளுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் 'பொறி'வைத்துப் பிடித்தனர்.மயூர் பங்கஜ் பிளாசாவில் உள்ள அலுக்கா கோல்ட் பேலஸின் மேலாளருக்கு 23ம் தேதி, மொபைல் போனில் பேசிய நபர், தன்னை கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி, ஐந்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து போலீசில் நகைக்கடை மேலாளர் புகார் செய்தார். இதையடுத்து மிரட்டல் விடுத்தவரை 'பொறி'வைத்துப் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.மயூர் விஹார், ஸ்மிருதி வேனிற்கு மேலாளர் மூலம் வரவழைத்த போலீசார், அங்கு மிரட்டல் விடுத்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் பாதல் குமார் பதக், 25, என்பதும் 'யூ-டியூப்' வீடியோக்களைப் பார்த்து, நகைக்கடை உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டது தெரிய வந்தது.இதற்காக தன் நண்பரிடம் இருந்து சிம்கார்டை பொய் சொல்லி வாங்கியதும், பழைய மொபைல் போனை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதற்கு முன்பு ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago