உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசுடன் கூட்டணி கிடையாது ஆம் ஆத்மி அதிரடி அறிவிப்பு

காங்கிரசுடன் கூட்டணி கிடையாது ஆம் ஆத்மி அதிரடி அறிவிப்பு

புதுடில்லி, “லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே காங்கிரசுடன் கூட்டணி அமைத்தோம். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்,” என, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் அறிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 18 கட்சிகள் இணைந்த இண்டியா கூட்டணி, 234 தொகுதிகளில் வென்றது. இதில், ஆம் ஆத்மி ஆளும் டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பா.ஜ., வென்றது. இது, ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில், டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை ஆம் ஆத்மி தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.இதன்பின், செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சிறையில் உள்ள நிலையில், இக்கட்டான சூழலில் இத்தேர்தலை நாங்கள் எதிர்கொண்டோம். டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். டில்லியில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மட்டுமே இண்டியா கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்தோம். எனவே, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ