உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு ஆபத்து: ஆம் ஆத்மி புகார்

கெஜ்ரிவாலுக்கு ஆபத்து: ஆம் ஆத்மி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலைக்கு கடும் ஆபத்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று தெரிவித்தது.இது குறித்து, டில்லி மாநில அமைச்சர் ஆதிஷி செய்தியாளரிடம் கூறியதாவது: கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு மோசமாக குறைந்துள்ளது. கெஜ்ரிவாலை போலி வழக்கில் சதி செய்து, பா.ஜ., சிறையில் அடைத்துள்ளது. அவரது உடல்நிலைக்கு கடும் ஆபத்து உள்ளது. அவரது எடை 8.5 கிலோ குறைந்துள்ளது. அவரது சர்க்கரை அளவு துாக்கத்தின் போது ஐந்து முறை 50க்கும் கீழ் குறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை இது ஆபத்தான நிலை.கெஜ்ரிவாலுக்கு பக்கவாதம் ஏற்பட்டால், மூளை பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சிறையில் இருப்பதால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது குறித்து, வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், நாடு மட்டுமல்ல; கடவுளும் மன்னிக்கமாட்டார் என்பதை பா.ஜ., அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

kumarkv
ஜூலை 18, 2024 18:35

இவனுக்கு ஆபத்து இவனால் தான்


Pandi Muni
ஜூலை 18, 2024 20:12

இல்லை இல்லை இவரால் இந்தியாவிற்கு ஆபத்து


kumarkv
ஜூலை 18, 2024 18:34

இவர் தற்கொலை பண்ணி கொள்ள சான்ஸ் அதிகம்


R.Varadarajan
ஜூலை 15, 2024 23:53

கசோரியினால் நாட்டிற்கே அல்லவா ஆபத்து?


cbonf
ஜூலை 15, 2024 16:50

டெல்லியில் உள்ள ஒவ்வொரு துறையையும் கெஜ்ரிவால் கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடிக்கும் போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். கெஜ்ரிவால் 1000 கோடிகளை பிட்காயினாக மாற்றி தனது ஐ-ஃபோனில் கடவுச்சொல்லை வைத்துள்ளார். அமலாக்க இயக்குனருடன் கடவுச்சொல்லைப் பகிரவும் அவர் மறுத்துவிட்டார். சிறையில் இருக்கும் போது கெஜ்ரிவால் நோய்வாய்ப்படும் ஒரு நாடகத்தை உருவாக்குகிறார். ஜாமீனில் விடுவிக்கப்படும்போது, கெஜ்ரிவால் வெப்பமான காலநிலையிலும் 24 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய முடியும்


Azar Mufeen
ஜூலை 15, 2024 16:41

நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டும்,எல்லாம் நலமுடன் இருக்க வேண்டுமா?


Mettai* Tamil
ஜூலை 15, 2024 16:05

பிரச்சாரம் செய்யும் போது ஆபத்து இல்ல ....


Srinivasan Krishnamoorthi
ஜூலை 15, 2024 16:02

வெளியிலிருந்து புலம்புவதன் காரணம் அவர்களுக்கு வர வேண்டிய காசு இந்த நபர் வெளியே வந்த தான் கிடைக்குமோ ?


Narayanan
ஜூலை 15, 2024 15:21

.விசித்திரம் வெளியில் இருந்தால் எல்லாம் சரியாகவே இருக்கிறது . இப்போதுகூட ஜாமினில் வெளிவந்து பிரச்சாரம் செய்தார் ஒரு உடல்நலக்குறைவும் இல்லை . கம்பீரமாக திரிந்தார் .


Nandakumar Naidu.
ஜூலை 15, 2024 14:32

போனால் தான் போகட்டுமே,தேச, சமூக விரோதமற்றும் ஊழல் இவர் இருந்தால் நாட்டிற்க்கு தான் கேடு.


S.Bala
ஜூலை 15, 2024 12:50

இந்திய நீதித்துறை செல்லும் பாதை எது என்று புரியவில்லை. ஏனெனில் ஒரு நீதிபதி குற்றவாளி 90 நாள் சிறை தண்டனை அனுபவித்ததற்கு வருத்தப்படுகிறார். இதே வருத்தம் ஒரு சாமான்யனுக்கு கிடைக்குமா ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி