உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனை விற்றதில் ரூ.75 லட்சம் லாபம் முதல்வர் குடும்பம் மீது குற்றச்சாட்டு

மனை விற்றதில் ரூ.75 லட்சம் லாபம் முதல்வர் குடும்பம் மீது குற்றச்சாட்டு

மைசூரு: முதல்வர் சித்தராமையா குடும்பத்தினரின் மீது, மற்றொரு நில மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா புகார் அளித்துள்ளார்.மைசூரு லோக் ஆயுக்தாவில், நேற்று புகார் அளித்த பின், அவர் அளித்த பேட்டி:'முடா'வில் நடந்துள்ள அனைத்து மனைகளின் முறைகேடுகள் குறித்து, விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தேன். ஆனால் முதல்வர் சித்தராமையா குடும்பத்தின் 14 மனைகள் பற்றி மட்டுமே, விசாரணை நடத்துகின்றனர். மற்றவர்கள் தப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளனர்.தட்டகள்ளி கிராமத்தில் சத்ய நாராயணா என்பவரிடம், முதல்வரின் மனைவி பார்வதி, 24 லட்சம் ரூபாய் கொடுத்து, ஒரு மனை வாங்கினார். 2008ல் வாங்கிய மனையை, 2014ல் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். ஆறு ஆண்டுகளில் 75 லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார். 3338 எண் கொண்ட மனை, 50 க்கு 80 அடி பரப்பளவு கொண்டதாகும்.பொது இடங்களில் தென்படாத முதல்வரின் மனைவி, பத்திரப்பதிவு அதிகாரிகளை, தான் இருக்கும் இடத்துக்கே வரவழைத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து, விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளேன்.முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான, முடா முறைகேடு வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க கோரிய, என் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன்.உச்ச நீதிமன்றதை நாடி, நேரத்தை வீணாக்குவதற்கு பதில், என்னிடம் உள்ள ஆவணங்கள், வரும் நாட்களில் எனக்கு கிடைக்கும் ஆதாரங்கள், சாட்சிகளை வைத்து வழக்கை நடத்த முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி