உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: நடிகர் தர்ஷன் கும்பல் கொடூரம்

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை: நடிகர் தர்ஷன் கும்பல் கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட ரசிகர் ரேணுகாசாமியின் உடலில், 34 இடங்களில் காயம் இருப்பதாகவும், அவரது மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பினார்.இதனால், கோபமடைந்த தர்ஷனும், பவித்ராவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை பெங்களூருக்கு கடத்தி வந்து சரமாரியாக அடித்து கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார், தர்ஷன், பவித்ரா உட்பட 18 பேரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சிரித்த முகம்

கடந்த 15ம் தேதி இரவு தர்ஷனை அழைத்துக் கொண்டு, ஆர்.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். கொலை செய்த போது தர்ஷன் அணிந்திருந்த உடைகள், ஷூ, வீட்டுக்கு வந்ததும் அவர் குளித்த தண்ணீர் பக்கெட், சோப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை தடய ஆய்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், பவித்ராவை ஆர்.ஆர்., நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று போலீசார் அழைத்து சென்றனர். அவரது படுக்கையறையில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. தலையணை, பெட்ஷீட் மற்றும் ரேணுகாசாமியை கொலை செய்தபோது பவித்ரா அணிந்திருந்த உடைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பவித்ராவை போலீசார் அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும், அப்பகுதி மக்கள் வீட்டின் முன் கூடினர்; பக்கத்து வீட்டு மாடிகளில் ஏறி நின்றும் பார்த்தனர். சோதனை முடிந்து வெளியே வந்தபோது எந்தவித கவலையும் இன்றி, சிரித்த முகத்துடன் பவித்ரா இருந்தார்.

கார் பறிமுதல்

மேலும், இந்த கொலையில் கைதான சித்ரதுர்காவை சேர்ந்த ராகவேந்திரா, ஜெகதீஷ், அனு குமார், ரவி ஆகியோரை, சித்ரதுர்கா அழைத்து சென்றும் போலீசார் விசாரித்தனர். ரேணுகாசாமியை காரில் கடத்திய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. ரேணுகாசாமியை கடத்தி வந்த காரும் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைதாகி உள்ள நந்திஸ் என்பவரிடம் விசாரித்த போது, பவித்ராவுக்கு தன் மர்ம உறுப்பு படத்தை ரேணுகாசாமி அனுப்பியதால், அவரது மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்ததும் தெரிந்தது.

கழுத்து எலும்பு முறிவு

இந்நிலையில், கொலையான ரேணுகாசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில், 'ரேணுகாசாமியின் உடலில் 34 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பெல்ட், இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் அவரது கழுத்து எலும்பு முறிந்துள்ளது.'தாக்குதலில், மர்ம உறுப்பிற்கு செல்லும் எலும்பும் முறிந்துள்ளது. மர்ம உறுப்பு உட்பட உடலில் ஐந்து இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, ரேணுகாசாமியை துடிக்க துடிக்க சித்ரவதை செய்து, தர்ஷன் கும்பல் கொலை செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கோவிந்தராஜ்
ஜூன் 18, 2024 02:40

சுலபமாக. வெளி வந்து விடுவான். நம் நாட்டில். இரண்டு மாதிரியாண சட்டம பணக்காரனுக்கு ஒன்று ஏழைக்கு ஒன்று. என்பது பலமுறை நிரூபிக்கபட்டுள்ளது


தமிழ்வேள்
ஜூன் 17, 2024 13:41

நடிகன் நடிகையின் சொந்த வாழ்க்கை அவலங்களுக்கு, ஒரு ரசிகன் உணர்ச்சிவயப்பட்டு ஏடாகூடமாக செயல்பட்டதால் வந்த வினை இது ....சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் தான் நடிகர் கும்பல் பாரத சமூகத்தால் ஊருக்கு வெளியே வைக்கப்பட்டது ..இது புரியாமல், அவர்களுடைய சொந்த அவலட்சண வாழ்க்கையில் தலையிட்டால் இப்படித்தான் அசிங்கமாக போகும் ......


Sampath Kumar
ஜூன் 17, 2024 11:00

இது வளர்ந்து வரும் வக்கிர புத்தியை காட்டும் செய்தி இதுக்கு காரணம் சினிமா மற்றும் ஆபாச சோசியல் மீடியாக்கள் தான் மனித நேயம் என்பது மறந்துபோய் மனித பேய்கள் வளர்ந்து வருவது சமூகத்துக்கு நல்லது அல்ல என்ன செய்ய கலி முத்திடுது


R S BALA
ஜூன் 17, 2024 09:13

கடைசில நடந்த சம்பவத்துல யோக்கியன் எவனுமில்லை அவனுக்கு உயிர் போச்சு இவளுக்கு நிம்மதி போச்சு..


தமிழ்வேள்
ஜூன் 17, 2024 13:45

ஒன்றும் ஆகாது ..சிறிது காலத்தில் செத்தவன் அடையாளம் சரியாக நிரூபிக்க படவில்லை என்று கூத்தாடிகள் வெளியே வந்துவிடுவார்கள் ...செத்தவன் எடுத்த கேவலமான செலஃபீ காரணமாக, அவனது மனைவியே கோர்ட்டில் அடையாளம் காட்ட தயங்கும்/கூசும் அளவுக்கு வக்கீல்களின் விசாரணைகள் இருக்கும் .... மானம் மரியாதைக்காக, செத்தவன் தனது கணவன் அல்ல என்று கூறவேண்டிய நிலைக்கு அவனது மனைவி தள்ளப்படுவாள் ...செத்தவன் எடுத்து அனுப்பிய போட்டோ அப்படி ஒரு கேவலமான ஒன்று .....கூத்தாடிகளின் சகவாசம் குடியை கெடுக்கும் என்பது சரிதானே ?


Ram
ஜூன் 17, 2024 06:20

செத்தவன் ஒன்னும் நல்லவன் இல்லைஏ


krishna
ஜூன் 17, 2024 12:21

RAM SIR ENNA KODURA KARUTHU.


Mani . V
ஜூன் 17, 2024 06:02

தர்ஷன் மற்றும் பதினான்கு வயது வித்தியாசத்தில் உள்ள தோழி கள்ளக் காதலி? இருவரும் இதே பாணியில் மின்சாரம் செலுத்தி சா.........ட வேண்டும்.


Mani . V
ஜூன் 17, 2024 06:00

தர்ஷன் மற்றும் பதினான்கு வயது வித்தியாசத்தில் உள்ள தோழி கள்ளக் காதலி? இருவரும் இதே பாணியில் மின்சாரம் செலுத்தி சாகடிக்கப்பட வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 17, 2024 01:02

ஒரு செலிபிரிட்டியின் பாதுகாப்பில் இருப்பவருக்கே மனஉளைச்சலை தரும் ரேணுகாச்சாமி போன்றோர் கையில் சாதாரண பெண்கள் சிக்கிக்கொண்டால் என்னாகும் என்று நினைக்கையில் நெஞ்சம் பதறுகிறது . சட்டதிட்டங்கள் கடுமையக இல்லாததால் , காவல்துறை சரியான ஒத்துழைப்பு நல்காததால் இந்த கொலை நடந்துள்ளதாக கருதுகிறேன் , பவித்ரா கவுடா கம்பளைண்ட் செய்திருந்தா நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்குமா?


jaya
ஜூன் 17, 2024 06:52

யப்பா முழு கேசும் தெரியுமா ? பொங்கிட்டியே


மேலும் செய்திகள்





புதிய வீடியோ