உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குக்கே சுப்ரமண்யாவில் நடிகை கத்ரினா கைப்

குக்கே சுப்ரமண்யாவில் நடிகை கத்ரினா கைப்

பெங்களூரு, கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், சுள்யா தாலுகாவில் பிரசித்தி பெற்ற தலமான குக்கே சுப்ரமண்யா கோவில் அமைந்துள்ளது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த தலத்துக்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரினா கைப், நேற்று முன்தினம் குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு வந்து, பரிகார பூஜைகளில் பங்கேற்றார். நேற்று நடந்த சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார்.யாகசாலையில் நடந்த சர்ப்ப தோஷ பரிகார பூஜைகளில் குடும்பத்தினருடன் அவர் பங்கேற்றார். குழந்தை வரம் வேண்டியும், தன் குடும்பத்துக்கு நல்லது நடக்கவும், கோவிலுக்கு அவர் வந்ததாக தெரிகிறது.அடையாளம் தெரிந்து, வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர் ஒருவரின் மொபைல் போனை, கத்ரினா கைபுடன் வந்திருந்த மெய்க்காவல் பெண் பறித்துக் கொண்டார்.பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலை காதலித்து திருமணம் செய்து கொண்ட கத்ரினா கைப், அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.பல ஹிந்து கோவில்கள், ஆன்மிக தலங்களை தரிசிக்கிறார். சமீபத்தில் பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவுக்கும், குடும்பத்துடன் சென்று புனித நீராடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !