உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அட்மிஷன் மறுத்த கல்லுாரிக்கு விருந்தினராக வந்த அதானி

அட்மிஷன் மறுத்த கல்லுாரிக்கு விருந்தினராக வந்த அதானி

மும்பை : கல்லுாரியில் சேர விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதே கல்லுாரியில், 50 ஆண்டுகளுக்கு பின், சிறப்பு விருந்தினராக, தொழிலதிபர் கவுதம் அதானி பங்கேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவர் கவுதம் அதானி. துறைமுகங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். 16 வயதில், குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, கவுதம் அதானி இடம்பெயர்ந்தார். கடந்த 1970களில், மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லுாரியில் விண்ணப்பித்தார். எனினும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எந்த கல்லுாரி அட்மிஷன் தர மறுத்ததோ, தற்போது அதே கல்லுாரி நிர்வாகம், ஆசிரியர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, கவுதம் அதானிக்கு அழைப்பு விடுத்தது.ஜெய்ஹிந்த் கல்லுாரியில், ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், கவுதம் அதானி பேசியதாவது:'நீங்கள் ஏன் மும்பைக்குச் சென்றீர்கள்; ஏன் படிப்பை தொடரவில்லை?' என, நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். எல்லைகளை தடைகளாக அல்ல, சவால்களாக பார்க்கும் பல்வேறு கனவுகளை கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞரின் இதயத்திலும் இதற்கு பதில் உள்ளது. மும்பை நகரம் தான் எனக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தது; தைரியத்தை கொடுத்தது. என்னை பொறுத்தவரை, வர்த்தகத் துறை ஒரு நல்ல ஆசிரியரை உருவாக்குகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி