உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள்! அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு! என்ன நடக்கிறது?

2 அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள்! அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு! என்ன நடக்கிறது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எம்.எல்.ஏ.

2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.

11 பேர் மீது வழக்கு

இந் நிலையில் அவர் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரின் 2 மகன்கள், உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.

வழக்கு பின்னணி

சென்னை பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வேண்டி சி.எம்.டி.ஏ., விடம் 2013ம் ஆண்டு விண்ணப்பித்தது. 2ஆண்டுகள் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.

ரூ.27 கோடி லஞ்சம்

ஆனால், ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் மனு அனுப்பியது. லஞ்ச பணத்தை வைத்திலிங்கம் மகன்கள், உறவினர் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல் கணக்கு காட்டப்பட்டு உள்ளது என்பது புகாரின் சாராம்சமாகும். ஆனால் கடன் பெற்ற நிறுவனம் 2014ம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வர்த்தகம் செய்யவில்லை என்பது வருமானவரித்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விசாரணை

அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில், உண்மை இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரிடமும் ஊழல் தடுப்பு பிரிவினர் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வழக்குகள்

சில நாட்கள் முன்பாக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்தடுத்து அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Raghavan
செப் 21, 2024 21:20

கபில் சிபல் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். ஏற்கனவே 90 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது அத்துடன் இன்னும் 2 வழக்கு சேரப்போகிறது அவளவுதான். வழக்கு விசரணைக்கு வருவதற்க்கே குறைந்தது ஒரு 7 அல்லது 8 வருடங்கள் ஆகும். ஆக வழக்கு முடிவுக்கு வரும்போது இந்தியா 100 வது சுதந்திர தினம் கொண்டாடும். இதெல்லாம் தெரிந்து தானே அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். நீதி மன்றங்கள் எல்லாம் வேஸ்ட்.


M Ramachandran
செப் 21, 2024 20:07

ஆம் அடுத்த தலைக்கு பல்லக்கு ரெடி என்று சமிக்கிநை வந்துடிச்சி என்று அர்த்தம்


கல்யாணராமன்
செப் 21, 2024 13:22

திமுக மற்றும் அதிமுகவினர் அரசியலில் இருப்பது .மக்கள் தொண்டு செய்ய அல்ல, பொது பணத்தில் மஞ்சள் குளிக்க மட்டுமே. மற்ற கட்சியினரும் ஓரளவு சுரண்டதான் செய்வர்.


RAAJ68
செப் 21, 2024 13:00

இந்த திமிலங்களை நடுக்கடலில் கொண்டு போய் திமிளங்களுக்கு இறையாக வீச வேண்டும்


RAAJ68
செப் 21, 2024 12:57

அதிமுக ஆட்சிக்காலத்தில் இவர்கள் அடித்த கொள்ளையில் இருந்து பாதி பணத்தை கேட்டார்களாம் ஸ்டாலின் குடும்பத்தினர் பேரம் படியவில்லை மூன்று வருடங்களாக பேரம் பேசி பேசி ஒன்றும் நடக்கவில்லை எனவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.


கோவிந்தராசு
செப் 21, 2024 11:34

கூட்டணிக்கு போன ஒன்றும் இருக்காது அதான் வேற என்ன


Rajarajan
செப் 21, 2024 11:33

இப்போதான் தமிழக திராவிட கட்சிகளின் அரசியல் சாயம் வெளுக்குது. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அது இருக்கட்டும். ஆகமொத்தம், இந்த வழக்குகள் ஜென்மத்துக்கும் முடியாது. எப்படியும் ஜாமீன் கொடுத்துருவாங்க அப்பிடியே ஒக்காந்து முன்னூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, ஒக்காந்து திம்பாங்க. பொதுமக்கள் தான் வழக்கம்போல ஏமாந்த சோணகிரிகள்.


R. Seenivasan
செப் 21, 2024 11:29

திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை ஏன் இல்லை.


Ramesh Sargam
செப் 21, 2024 11:16

ஒரு சிலரைவிட்டு இந்தியாவில் லஞ்சம் வாங்காத அரைசியல்வாதிகள் இருக்கவே வாய்ப்பில்லை. அந்த ஒரு சிலரை கைவிட்டு எண்ணிவிடலாம். வாங்குபவர்களை மிகவும் திறன் கொண்ட கணினி மூலம் கூட என்ன முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை