உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று! சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று! சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோட்டயம்: கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் அவ்வப்போது பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது கோட்டயத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அம்மாவட்டத்தில் இருக்கும் கூட்டிக்கல், வழுர் ஆகிய கிராமங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இது குறித்து கோட்டயம் கலெக்டர் ஜான் சாமுவேல் கூறி இருப்பதாவது; பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ள பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. 1 கிலோ மீட்டர் சுற்றளவில் காணப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளையும் அழிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட, மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு உள்ளார். 10 கி.மீ., தொலைவில் உள்ள அனைத்து பண்ணைகளும் தீவிர கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. பன்றி இறைச்சி விற்பனைக்கும், தொற்று கண்டறியப்பட்டுள்ள இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கும், வழக்கமாக காணப்படும் H1N1 பன்றிக் காய்ச்சலுக்கும் வேறுபாடுகள் உண்டு. இந்த வகையான காய்ச்சல் பன்றிகளை மட்டுமே தாக்கும். மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
டிச 14, 2024 13:45

அவர்கள் மற்றைய மாநிலங்களில் கொட்டும் கழிவுகளை போல அவர்களுக்கு வரும் நோய்களும் அதிகரித்து வருகிறதே


sundarsvpr
டிச 14, 2024 11:42

பன்றிகள் மனிதர்களுக்கு உணவாக பயன்படுகிறது. அவைகளுக்கு தொற்று காய்ச்சல் வந்தால் காப்பாற்றுவது நம் பொறுப்பு. இப்படிப்பட்ட மிருகங்களை தனி இடத்தில பாதுகாப்பாக வைத்து ஏன் சாப்பாடு மருந்து கொடுக்கக்கூடாது. மனிதனுக்கு தொற்று வந்தால் தனியாய் வைத்து காப்பாற்றுகிறோம். இதற்கு பொறுப்பு ஆண்டவன்தான் . எல்லா உயிர் வஸ்துக்களுக்கு ஆறாம் அறிவு வழங்கிருக்கலாம். அவர் தப்பித்துவிடுவார் பூர்வ ஜென்ம பாவ புண்ணியம் என்று.


vbs manian
டிச 14, 2024 09:11

அது எப்படி எல்லா தொற்று காய்ச்சல் நோய்கள் கேரளாவில் ஆரம்பம் ஆகின்றன


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 08:45

கேரளாவுக்கு மட்டுமே நோய்பரப்புவதில் பெருமையா ???? பன்னாட்டு விமான நிலையங்களை மற்ற மாநிலங்களிலும் அதிகப்படுத்தணும் .....


sridhar
டிச 14, 2024 08:12

கேரளா is the breeding ground of all epidemics and pandemics in India due to the cultural and food habit changes in the last 100 years.


சந்திரசேகர்
டிச 14, 2024 07:57

அது என்னமோ தெரியலை.இவங்க மாநிலத்தில் தான் எல்லா நோயும் முதல்ல வருது.என்னத்த திண்பாய்கன்னு தெரியவில்லை


raja
டிச 14, 2024 07:29

மனிதர்களை தாக்காதுன்னா அப்புறம் ஏன் தடை....சேட்டன் விரும்பி சாப்பிடலாமுன்னு சொல்லலாமே...


முக்கிய வீடியோ