உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரிலும் பலத்த மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஜம்மு - காஷ்மீரிலும் பலத்த மழை: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால், தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரையும் தடைபட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கந்தர்பல் மாவட்டத்தின் கச்சர்வன் பகுதியில் நேற்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. எதிர்பாராதவிதமாக மழை கொட்டித் தீர்த்ததில் அங்குள்ள கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாலை மூடல்

இதற்கிடையே, ஸ்ரீநகர் - லே இடையே தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிந்து, போக்குவரத்து தடைபட்டது.எனினும், மேக வெடிப்பு காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும், சில வீடுகள் சேதமடைந்து உள்ளதாக ஜம்மு - காஷ்மீர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் செல்லும் பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் முடியும் வரை அச்சாலை மூடப்பட்டுஇருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையும் மூடப்பட்டுஉள்ளதால், அங்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட சிம்லா, குலு உள்ளிட்ட மாவட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமோஜ் கிராமத்தைச் சேர்ந்த 40 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டு அணைகள் திறக்கப்பட்டதால், மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தாமோதர் மற்றும் அஜய் நதிக்கரையோரம் அமைந்துள்ள மேற்கு வங்கத்தின் ஹூக்ளி, கூச்பெஹார், அலிபுருதுார் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புனேயிலும் வெள்ளம்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த மழை பெய்தது.கடக்வாஸ்லா அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், புனே நகரின் தாழ்வான பகுகளை சூழ்ந்ததால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, ஏராளமானோரை அங்கிருந்து மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மழை பெய்வதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ராணுவத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி