சோப் ஸ்டோன் கல்லால் கட்டப்பட்ட அம்ருதேஸ்வரா கோவில்
ஆன்மிகம், சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம், கர்நாடகா. இங்குள்ள ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்களை பார்க்க, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கட்டட கலை, பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் ஒன்று அன்னிகேரி அம்ருதேஸ்வரா கோவில். முதல் கோவில்
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் இருந்து 44 கி.மீ., துாரத்தில் உள்ளது அன்னிகேரி கிராமம். இங்கு கல்யாணி சாளுக்கியர்களால் கட்டப்பட்ட அம்ருதேஸ்வரா கோவில் உள்ளது.மிகவும் பழமையான கோவிலாகவும், பாரம்பரியமிக்க இடமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் 'சோப் ஸ்டோன்' எனும் உருமாற்ற பாறையை கொண்டு கட்டப்பட்ட முதல் கோவிலாகும்.இந்த கோவிலில் 76 துாண்கள் உள்ளன. கோவிலின் சுவர்கள் புராண உருவங்களின் சிற்பங்களால் மூடப்பட்டிருக்கும். இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. எப்படி செல்லலாம்?
தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களுக்கு அனுமதி இலவசம். பெங்களூரில் இருந்து அன்னிகேரி 436 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து அன்னிகேரிக்கு அரசு பஸ் சேவை உள்ளது. ரயில், விமானத்தில் சென்றால் ஹூப்பள்ளியில் இறங்கி அங்கிருந்து அன்னிகேரி அம்ருதேஸ்வரா கோவிலை சென்றடையலாம்.
எப்படி செல்லலாம்?
பெங்களூரில் இருந்து அன்னிகேரி 436 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து அன்னிகேரிக்கு அரசு பஸ் சேவை உள்ளது. ரயில், விமானத்தில் சென்றால் ஹூப்பள்ளியில் இறங்கி அங்கிருந்து கோவிலை சென்றடையலாம்.