உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசை கவிழ்க்க முயற்சியா? பிரஹலாத் ஜோஷி மறுப்பு!

அரசை கவிழ்க்க முயற்சியா? பிரஹலாத் ஜோஷி மறுப்பு!

ஹூப்பள்ளி: ''காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் நோக்கம், எங்களுக்கு இல்லை,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:கவர்னர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக, பா.ஜ., மீது காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். எங்களால் அரசு கவிழாது. அரசை கவிழ்க்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை. ஆனால் காங்கிரசாரின் உட்கட்சிப் பூசலால் அரசு கவிழ்ந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.மற்றவரின் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, முதலில் உங்கள் வீட்டை சரி செய்து கொள்ளுங்கள். பா.ஜ., எந்த காரணத்தை கொண்டும், காங்., அரசை கவிழ்க்க முயற்சிக்காது.நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறோம். இங்கிருந்து பணியாற்றும்படி மக்கள் உத்தரவிட்டுள்ளனர். எங்கள் பணியை, நாங்கள் செய்கிறோம். முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் சுத்தமானவராக வெளியே வரட்டும். நியாயமான முறையில் விசாரணை நடக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி