உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் எம்பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் படம்; பா.ஜ., வெளியிட்டது

பெண் எம்பியை தாக்கிய கெஜ்ரிவாலின் உதவியாளர் படம்; பா.ஜ., வெளியிட்டது

புதுடில்லி: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் தாக்கப்பட்டு, 72 மணி நேரம் ஆகியுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆம்ஆத்மியில் பெண்களுக்கு எதிராக, அராஜகம் நடக்கிறது என பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபின் குமாருக்கு, தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், ராஜ்யசபா ஆம் ஆத்மி பெண் எம்.பி., தாக்கப்பட்டதாகவும், கெஜ்ரிவாலின் அறிவுறுத்தலின்படி இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் உதவியாளர் பிபின் குமார் மற்றும் கெஜ்ரிவால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பகிர்ந்துள்ளார்.

72 மணி நேரம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 72 மணி நேரம் ஆகியும் பிபின் குமார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. கெஜ்ரிவால் அவரைப் பாதுகாக்கிறார். ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது. இந்த தகவலை, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நவீன் ஜெய்ஹிந்த் மற்றும் நிதின் தியாகி ஆகியோர் தெரிவித்தனர். ஒரு பெண் ராஜ்யசபா எம்.பி மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆம்ஆத்மியில் பெண்களுக்கு எதிராக, அராஜகம் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்மன்!

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபின் குமாருக்கு, தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indhuindian
மே 16, 2024 13:54

சேர்க்கை தோஷம் அப்படிதான் நடக்கும்


Lion Drsekar
மே 16, 2024 13:45

இந்த சம்பவம் முழு வீடியோவும் வாட்சப்பில் திரைப்படம் ஷூட்டிங் எடுத்தது போல் வெளிவந்து விட்டது


Ramesh Sargam
மே 16, 2024 12:43

ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அந்த கட்சி தலைவர் கெஜ்ரிவால் உட்பட பல தலைவர்கள் ஏதாவது தகாதது செய்து வம்பில் சிக்கிக்கொள்கிறார்கள் கட்சியில் உள்ளவர்கள் போக்கே சரியில்லை கட்சியை தடை செய்யவேண்டும்


Azar Mufeen
மே 16, 2024 12:13

பாலியல் புகார் உள்ள பிரிச்பூசனையே கைது செய்யாத பிஜேபி. இதை பேசுவது அபத்தம்


ஆரூர் ரங்
மே 16, 2024 12:06

கெஜுக்கு தாற்காலிக ஜாமீனை வாங்கி வாங்கி கொடுத்த அபிஷேக் சிங்விக்கு பரிசாக எம்பி பதவியை ஒதுக்க முயற்சியாம்.அதற்காக இந்த சுவாதியை ராஜினாமா செய்யுமாறு மிரட்டி தாக்கப்பட்டுள்ளார் என பேசப்படுகிறது.. . பாவம். ஒரு நபரின் பதவியாசைக்காக கட்சிக்காக உழைத்த பெண்ணை தாக்கியுள்ளனர் என்பது மோசமான விஷயம். இனியும் கெஜரியை நம்ப ஆளில்லை.


Selvakumar Krishna
மே 16, 2024 11:53

ப்ரெஜிவால் ரேவண்ணவை முதலில் வெளியே கொண்டு வந்து தண்டிக்கட்டும், பின்னர் பீசப்பி மற்றவரை பற்றி பேச தகுதி இருக்கும்


Rajamani K
மே 16, 2024 14:01

ரேவண்ணா முதலில் பாஜகவை சேர்ந்தவரில்லை பாஜக கண்டனம் தெரிவித்து விட்டது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கிறார்கள்


ஆரூர் ரங்
மே 16, 2024 14:54

அவங்கெல்லாம் உங்களபிமான UPA கூட்டணியிலே இருந்தபோது செய்த லீலைகள்தான்( சேர்க்கை சரியில்ல) .அப்போது மவுனமாக இருந்ததேன்?


Sampath Kumar
மே 16, 2024 11:17

சாத்தான வேதம் ஓதுகின்றது என்ன செய்ய


Srinivasan Krishnamoorthi
மே 16, 2024 10:53

வீடியோ சுற்றி வருகிறது கெஜ்ரி தரம் இறங்கி விட்டார்


Suppan
மே 16, 2024 13:04

அண்ணா ஹஜாரேவை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்த பொழுதே தரம் தாழ்ந்து விட்டார் பிறகு முதல்வராக இருந்த பொழுதே தர்ணா, ஊழலை ஒழிப்பேன், லோகபால் கொண்டு வருவேன் என்றெல்லாம் புருடா விட்டு காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தார் பிறகு படி தரமானவராக இருக்க முடியும் ?


கண்ண
மே 16, 2024 10:36

இப்போது ஆரிஷி AAPயின் முக்கிய தலைவர் ஏன் காணாவில்லை.....உண்மை அறிந்து விலகியிருக்க இருக்கிறாறோ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை