உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை முயற்சி வழக்கு 19 ஆண்டுக்கு பின் கைது

கொலை முயற்சி வழக்கு 19 ஆண்டுக்கு பின் கைது

பெங்களூரு, பெங்களூரில் பேக்கரி உரிமையாளர் மனைவியை கொல்ல முயற்சித்து தலைமறைவானவரை, 19 ஆண்டுகளுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.ஹாசன் மாவட்டம் ஆலுார் கிராமத்தை சேர்ந்தவர் தொட்டகவுடா, 45. வேலை தேடி, 2005ல் பெங்களூரு வந்தார். ஹனுமந்த நகர், 50 அடி சாலையில் உள்ள பேக்கரியில் பணிக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில், பணப்பிரச்னை காரணமாக, பேக்கரி உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.இதனால் கோபமடைந்த தொட்ட கவுடா, ஜனவரி 13ம் தேதி இரவு உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற அவர், உரிமையாளரின் மனைவியை கத்தியால் குத்தி விட்டு, தப்பியோடிவிட்டார்.படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் தப்பினார். ஹனுமந்த நகர் போலீசார், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்த போது, தொட்ட கவுடாவின் வழக்கு குறித்து விசாரித்தனர். தற்போது அவரது சொந்த மாவட்டமான ஹாசனில் ஆட்டோ ஓட்டுனராக இருப்பதாக தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை