உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆணவத்தை காட்டும் ராகுல், இண்டியா கூட்டணியினர்: அமித்ஷா ஆவேசம்

ஆணவத்தை காட்டும் ராகுல், இண்டியா கூட்டணியினர்: அமித்ஷா ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: 'லோக்சபா தேர்தலில் தோல்வியை ஏற்க முடியாமல், காங்., எம்.பி., ராகுல் உட்பட இண்டியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டுகின்றனர்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அமித்ஷா பேசியதாவது: ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில், 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. ஆட்சி அமைத்த பிறகு, பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள்தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.

ரூ.12 லட்சம் கோடி ஊழல்

லோக்சபா தேர்தலில் தோல்வியை ஏற்க முடியாமல் ராகுல் உட்பட இண்டியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டுகின்றனர். இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். 2014, 2019, 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

paulson wesly
ஜூலை 21, 2024 15:52

ஹாஹாஹா


venugopal s
ஜூலை 21, 2024 12:47

பத்து வருடங்களாக இவர்கள் ஆணவத்தோடு ஆடிய ஆட்டத்துக்கு தான் மக்கள் ஆப்பு வைத்து உள்ளனர் என்பதை மறந்து விட்டாரோ ?


Barakat Ali
ஜூலை 21, 2024 10:33

உண்மைதான் ....... உங்களுக்கும் அவங்களை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியல ..........


Nagarajan D
ஜூலை 20, 2024 21:22

எதுவாக இருந்தாலும் பிஜேபி குறைந்தது 50 சீட்டுகள் அதிகம் பெற்றிருந்தால் இந்த நிலை நமக்கு வந்திருக்காது


J.Isaac
ஜூலை 20, 2024 20:59

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்


T.sthivinayagam
ஜூலை 20, 2024 19:46

ஆனவத்தின் விளைவு தானே மைனாரிட்டி பாஜக அரசு


rama adhavan
ஜூலை 20, 2024 20:05

இல்லை. 28 கட்சிகள்,பொய் வாக்குறுதிகளின் விளைவு. அப்போதும் அவர்கள் சொன்னபடி 285 சீட் வரவில்லையே? உங்களின் நினைவுக்கு : 2006இல் திமுக 90 சீட்கள் மட்டுமே வாங்கி மைனரிட்டி அரசாக 2011 வரை ஆட்சி செய்தது.


ஆரூர் ரங்
ஜூலை 21, 2024 10:54

எது? ராஜீவ் 400 க்கும் மேற்பட்ட எம்பி களுடன் ஆட்சி செய்தார். மகன் 99 ஐ கூடத் தாண்டவில்லை.


கோவிந்தராஜ் கிணத்துக்கடவ
ஜூலை 20, 2024 18:51

ஆணவத்த நீங்க காட்டாம இருக்க தான் மக்கள் கடிவாளம் பூட்டியுள்ளனர்


S. Narayanan
ஜூலை 20, 2024 18:49

எல்லா மனிதனுக்கும் கொஞ்சமாவது ஆணவம் இருக்கும். அது இயல்பு.


Swaminathan L
ஜூலை 20, 2024 18:40

ராகுல், இண்டி கூட்டணியை விட்டு விட்டு அரசு நிர்வாகம், நாட்டு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று கவனம் செலுத்துவது நல்லது. இவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடித்தால் அடுத்து வரும் தேர்தல்களின் முடிவுகள் பாதிக்கப்படும்.


M.S.Jayagopal
ஜூலை 20, 2024 18:38

இந்தி கூட்டணி கூடிய விரைவில் வலிமையை இழக்கும். அப்போது ராகுல் அடங்கவும் வாய்ப்பு உள்ளது.பிஜேபி சிறிது காலம் இதற்காக காத்திருக்க வேண்டும்.


J.Isaac
ஜூலை 20, 2024 20:58

இளவுக்காத்த கிளி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை