உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாடலுக்கு நடனமாடிய வாலிபர் மீது தாக்குதல்

ராமர் பாடலுக்கு நடனமாடிய வாலிபர் மீது தாக்குதல்

கலபுரகி : கலபுரகி தாலுகா, இட்டகா கிராமத்தை சேர்ந்தவர் பீமா சங்கர், 25. இவரது நண்பர் சுனில். நேற்று முன்தினம் இரவு, சுனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இட்டகா கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.ராமர் பாடலை ஒலிபரப்பி, பீமா சங்கர் நடனமாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த வேறு மத வாலிபர்கள், ஐந்து பேர், ராமர் பாடலை போட்டு நடனம் ஆடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீமா சங்கருடன் வாக்குவாதம் செய்தனர்.அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். பலத்த காயம் அடைந்த பீமா சங்கர், கலபுரகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் குறித்து அளிக்கப்பட்ட புகாரில், கலபுரகி பல்கலைக்கழக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய வாலிபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை