உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

போலீஸ் ஜீப்பில் மோதி தப்பிக்க முயற்சி: போதை கும்பல் சிக்கியது

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி போலீசார், நேற்று காலை கோவை- - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், தோணிக்கடவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழயன்னுார் பகுதியிலிருந்து வந்த காரை நிறுத்திய போது, அதிவேகமாக வாணியம்பாறை பகுதியை நோக்கி சென்ற அக்காரை, பின் தொடர்ந்து சென்ற போலீசார், ஹைவே போலீசாரிடம் தகவலை தெரிவித்தனர்.வாணியம்பாறை அருகே, காரை தடுக்க முயன்ற போக்குவரத்து எஸ்.ஐ., மோகன்தாஸ் தலைமையிலான போலீசாரின் ஜீப்பில் மோதிவிட்டு, அவர்கள் தப்ப முயன்றனர். அப்போது, போலீஸ் ஜீப்பில் மோதியதில், கார் டயர் வெடித்து கட்டுப்பாடு இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது.தொடர்ந்து, காரில் இருந்த கும்பல் இறங்கி ஓட முயன்ற போது, போலீசார் பிடித்தனர். காரில் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா, 100 கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.எ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.அவர்கள் திருச்சூரை சேர்ந்த முகமதுபஷீர், 28, செர்ப்புளச்சேரி முகமது ஜாபர், 25, செய்துஅலி, 27, என்பது தெரியவந்தது. வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருள் கடத்தி வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், வழியில் பல வாகனங்களில் மோதி விட்டு, நிற்காமல் வந்ததும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்து, கஞ்சா, போதை மாத்திரை, காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SIVAN
ஜூன் 30, 2024 15:33

பேச்சா பேசுவாங்க எங்க இதுல அப்டி சொல்லிருக்கு இப்டி சொல்லுக்கு, இப்படி பண்ணனும் இங்க நிக்கணும் அப்டின்னு சொல்லுவானுங்க கடை பிடிக்க மாட்டாங்க. இந்த மாதிரி ஏதாவந்து வேலை செய்வார்கள்


duruvasar
ஜூன் 30, 2024 09:33

மர்ம நபர்கள் பிடிபட்டனர் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். தமிழ்நாடாக இருந்தால் பிடிபட்டது ஆயூர்வேத மருந்து தயாரிக்கும் மூல பொருள்களும், சத்து மாத்திரைகள் என்றும் கூறி காரை நிறுத்தியதற்காக மன்னிப்பும் கேட்டிருப்பார்கள்


Pandi Muni
ஜூன் 30, 2024 07:32

நாட்டின், உலகின் சாபக்கேடு இந்த இனம்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 30, 2024 06:28

பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் , எவ்ளோ கோவமா பாக்குறாரு மலையாளி


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி