உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்லோவாக்கியா பிரதமரை சுட்டுக்கொல்ல முயற்சி

ஸ்லோவாக்கியா பிரதமரை சுட்டுக்கொல்ல முயற்சி

ஹன்ட்லோவா: ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ, 59, மீது மர்ம நபர் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ. இங்குள்ள ஹண்ட்லோவா நகரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். பின், ஆதரவாளர்களை சந்திப்பதற்காக கலாசார இல்லம் வந்தார். இல்லத்துக்கு வெளியே அவர் வந்தபோது, மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிரதமர் ராபர்ட் பிகோவை நான்கு முறை சுட்டார். இதில் அவரது வயிற்றில் குண்டுகள் துளைத்தன. அருகில் நின்றிருந்த பாதுகாவலர்கள் அவரை அதிரடியாக மீட்டு காரில் ஏற்றி சென்றனர். ஹெலிகாப்டர் வாயிலாக அவர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. பிரதமர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் சுசானா குபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.பார்லிமென்ட் தேர்தலுக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை