மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
பெங்களூரு : பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிரொலியால், பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது.கர்நாடகாவில் கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் உயர்த்தப்பட்டது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 2 ரூபாய் பால் விலை உயர்த்தப்பட்டது. விரைவில், மின் கட்டணம், காவிரி குடிநீர் கட்டணம் உயர்த்துவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.அந்த வரிசையில் ஆட்டோ கட்டணம் உயர்த்தும்படி, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டருக்கு, ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது. 'பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், பெங்களூரில் கடந்த 2021 டிசம்பர் 20ம் தேதி, ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின், உயர்த்தப்படவில்லை.எனவே தற்போது முதல் 2 கி.மீ., துாரத்துக்கு, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை, 40 ரூபாயாக உயர்த்தும்படி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இத்துடன், ஒரு கி.மீ., துாரத்துக்கு 15 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணம் உயர்த்துவது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்படுகிறது. உயர்த்தப்படும் பட்சத்தில், பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.
1 hour(s) ago