வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சரியான விரிவாக வரவேற்கப்படவேண்டிய கருத்து
பெங்களூரு, : வனத்துறை கூடுதல் தலைமை செயலர் அஞ்சும் பர்வேஸுக்கு, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே எழுதிய கடிதம்:புனித தலங்கள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் சோப்பு, ஷாம்பு விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு சோப்பு, ஷாம்பு வாங்குவோர் அவற்றை பயன்படுத்திவிட்டு பாக்கெட்டுகளை கரையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பை கழிவுகள் தேங்குகின்றன. ரசாயனம், நீர்நிலைகளில் கலக்கின்றன. தண்ணீர் அதிகம் மாசுபடுகிறது. நீர்வாழ் உயிரினங்களும் இறந்து போகின்றன.ஷாம்பு, சோப்பு மலிவு விலையில் கிடைப்பதால் மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். புனித தலங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கும் பக்தர்கள், மூடநம்பிக்கை காரணமாக குளித்த பின், ஈர துணிகளை தண்ணீரில் வீசுகின்றனர். இதனால் துணி குவியலும் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.நீர்நிலைகளை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ஷாம்பு, சோப்பு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். இதனை பின்பற்றினால் தான் நீர்நிலைகளை பாதுகாக்க முடியும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
சரியான விரிவாக வரவேற்கப்படவேண்டிய கருத்து