வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அட இதுவரை தெரியாமல் போச்சே இனி நம்ம ஊர் அரசு அலுவலகங்களிலும் இப்படி செய்ய வாய்ப்புக்கள் அதிகம் வாழ்க
மேலும் செய்திகள்
பொது தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
05-Feb-2025
உத்தரகன்னடா : அரசு அலுவலகத்தில், படுக்கை அறை அமைத்து கொண்ட சுற்றுலா துணை இயக்குநர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உத்தரகன்னடா கார்வாரின் தொழில் துறை அதிகாரியாக இருந்த ஜெயந்த், சில மாதங்களுக்கு முன், சுற்றுலா துணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.இவர் பணி நிமித்தமாக சில நாட்களுக்கு முன், பெங்களூரு சென்றிருந்தார். எனவே சுற்றுலா துணை இயக்குநர் பொறுப்பு, கார்வார் உதவி கமிஷனர் கனிஷ்காவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.இதற்கிடையில், சுற்றுலா துணை கமிஷனர் அலுவலகத்தை, வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யும்படி, உத்தரகன்னட மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவிட்டிருந்தார்.இதன்படி அலுவலகத்தை மாற்றுவதற்கு, கனிஷ்கா ஏற்பாடு செய்து வந்தார். அப்போது அலுவலகத்தில் ரகசிய படுக்கை அறை இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார்.அறையில் கட்டில், மெத்தை இருந்தது. படுக்கை இருப்பதே தெரியாமல், கதவு முன் ஸ்டேஷனரி பொருட்கள் வைத்து மறைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகத்தில் படுக்கை அறை இருப்பது ஏன் என, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்த போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை.அரசு அலுவலகத்தை வீடு போன்று பயன்படுத்தியது குறித்து, மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி சுற்றுலா துணை இயக்குநர் ஜெயந்துக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.காலக்கெடு முடிந்தும் ஜெயந்த் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, சிபாரிசு செய்திருந்தார்.இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுலா அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் உத்தரவிட்டிருந்தார். இதன்படி துறை செயலர் முகமது இப்ராஹிம், அரசு அலுவலகத்தில் படுக்கை அறை அமைத்த ஜெயந்தை பணியிடை நீக்கம் செய்து, நேற்று உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
அட இதுவரை தெரியாமல் போச்சே இனி நம்ம ஊர் அரசு அலுவலகங்களிலும் இப்படி செய்ய வாய்ப்புக்கள் அதிகம் வாழ்க
05-Feb-2025