உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வறுமை மிக கொடியதுதான்! கடனை அடைக்க மகனை ரூ.9000க்கு விற்ற தாய்!

வறுமை மிக கொடியதுதான்! கடனை அடைக்க மகனை ரூ.9000க்கு விற்ற தாய்!

பாட்னா: வாங்கிய கடனை அடைக்க வேறு வழியின்றி பெற்ற மகனை ரூ.9000க்கு தாய் விற்றுள்ளார். இந்த சோக சம்பவம் பீகாரில் அரங்கேறி கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது. பீகார் மாநிலத்தில பச்சிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஹரூன். இவரது மனைவி பெயர் ரெஹானா. இந்த தம்பதிக்கு மொத்தம் 8 குழந்தைகள். 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். முகமது ஹரூன், ரெஹானா தம்பதியினர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.50,000 கடன் வாங்கியதாக தெரிகிறது.நாளடைவில் இந்த கடன் தொகையை அவர்கள் செலுத்தாமல் விட்டுள்ளனர். இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் ஹரூன் தம்பதியை அணுகி, பணத்தை செலுத்துமாறு தொடர்ந்து நிர்பந்தம் செய்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் நெருக்கடி முற்றவே, தமது குழந்தைகளில் ஒன்றை விற்று கடனை அடைத்து விடலாம் என்று நினைத்துள்ளனர்.இதன்பின்னர், ரெஹானா, தமது சகோதரர் தன்வீர் என்பவரை அணுகி தமது ஒன்றரை வயது ஆண் குழந்தையை விற்க ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அவரும் அதே பகுதியில் இருந்த ஆரிப் என்பவரிடம் குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். ஆனால் வெறும் 9,000 ரூபாய் மட்டுமே ரெஹானா தம்பதிக்கு தன்வீர் தந்துள்ளதாக தெரிகிறது.இந்த விவரங்கள் அனைத்தும் அறிந்த போலீசார், உடனடியாக களத்தில் இறங்கினர். முகமது ஹரூன்-ரெஹானா தம்பதியிடம் விசாரணை நடத்தி, குழந்தை இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதன்படி ஆரிப் வீட்டில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார், பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையை அனைவரையும் பிடித்துள்ள போலீசார், வேறு யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rangarajan Cv
நவ 04, 2024 09:25

Illiteracy is responsible for this sad state of affairs. State can work in uplifting a family, which inturn should be self sustaining, otherwise this chain can not be broken. Need effective communication at local level.


Kasimani Baskaran
நவ 04, 2024 05:59

மதத்தினர் சொன்னதை கேட்டு கண்டமேனிக்கு பிள்ளை பெற்றுக்கொண்டால் இது போல இக்கட்டில் உதவும் என்று நினைத்துவிட்டார் போல தெரிகிறது.


rama adhavan
நவ 04, 2024 03:27

ஜமாத் கூட உதவவில்லையா?


Matt P
நவ 04, 2024 00:53

எந்த மதத்தையும் குறை சொல்வது நமது நோக்கமல்ல. இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டும். நமது மதத்தின் மக்கள் தொகை பெருக வேண்டும் என்ற வதந்தி பரப்பலும நடந்து கொண்டு தான் இருக்கிறது. வறுமை ஜாதி மதம் என்று பார்ப்பதில்லை. வறுமை வந்தாலும் அவர்களது சாதி மதமும் உதவ போவதில்லை. நம் கையே நமக்கு உதவி என்று வாழ்ந்தால் தான் உண்டு வாழ்க்கை. நம்மை நம்பி இந்த உலகத்து வரும் குழ்நதைகளுக்காவது சிந்தித்து வாழலாம்.


Venkatesan Srinivasan
நவ 03, 2024 23:14

அவர்கள் பசி வயிற்றையும் கடந்து.


vijai
நவ 03, 2024 22:48

இந்த பொறம்போக்குக்கு சோத்துக்கு வழியில்ல எதுக்கு எட்டு குழந்தைங்க


R.MURALIKRISHNAN
நவ 03, 2024 22:32

பெறும் போது கண்டபடி பெத்துக்கொள்ள வேண்டியது பிறவு கூப்பாடு போடவேண்டியது .திருந்தாத ஜென்மங்கள்


சிவராஜ்
நவ 03, 2024 22:24

வேலைக்கே போகாமல் பெத்து தள்ளி இருக்காங்க. அதனால் தான் இந்த நிலமை.


Dharmavaan
நவ 03, 2024 20:48

வறுமை இருக்கும்போது கண்டபடி பிள்ளை பெறுவது ஏன்


KRISHNAN R
நவ 03, 2024 20:43

பிரச்சினை வறுமை காரணமாக இல்லை. அதிக அளவில் பெற்றது தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை