உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டுறவு சங்கத்தில் மோசடி பிஜு ஜனதா தள நிர்வாகி கைது

கூட்டுறவு சங்கத்தில் மோசடி பிஜு ஜனதா தள நிர்வாகி கைது

புவனேஸ்வர், ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பிஜு ஜனதா தள இளைஞர் அணி நிர்வாகி சவும்ய ஷங்கர் சக்ராவை மாநில பொருளதார குற்றவியல் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து சி.ஐ.டி., பிரிவின் கூடுதல் டி.ஜி.பி., வினய்தோஷ் மிஸ்ரா கூறியதாவது:ஒடிசாவில் உள்ள கனிமவளம் மிக்க கியோஞ்சர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. சுரங்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக துவங்கப்பட்ட இந்த சங்கத்தில், கடந்த 2017 முதல் 2024ம் ஆண்டு வரை தலைவர் மற்றும் செயலர்களாக மனாஸ் பாரிக் மற்றும் உத்கல் தாஸ் ஆகியோர் இருந்தனர்.உள்ளூர் கிராம தலைவர்களின் உதவியுடன், இவர்கள் இருவரும் கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது கடந்தாண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.குறிப்பாக, சுரங்க பணியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக, 10 கோடி ரூபாய் பொய் கணக்கு எழுதப்பட்டதும் தெரியவந்தது. அந்த பணத்தில் மனாஸ் மற்றும் உத்கலின் நண்பரான பிஜு ஜனதா தள நிர்வாகி சவும்ய ஷங்கர் சக்ராவுக்கு சொந்தமான பல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.மூவரும், 185 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை