மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
சிவாஜிநகர் : ''கவர்னர் மூலம் முதல்வருக்கு நோட்டீஸ் அளித்து, ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது,'' என மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ கல்லுாரி மற்றும் பவுரிங் அரசு மருத்துவமனையை, மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில், கர்நாடகா மக்கள் காங்கிரசை வெற்றி பெற செய்தனர். பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். கவர்னர் மூலம் முதல்வருக்கு நோட்டீஸ் அளித்து, ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., - ம.ஜ.த.,வினர் நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது. அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்காது.முந்தைய பா.ஜ., ஆட்சியில் தான் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது. அவர்கள் ஆட்சியில் தான், கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர்.இதனால், பா.ஜ., மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. தற்போது பா.ஜ.,வின் நிலை, தண்ணீரில் இல்லாத மீன் போன்று ஆகிவிட்டது. அவர்களின் பாதயாத்திரை நாடகத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.என்னதான் பாதயாத்திரை நடந்தாலும், கர்நாடக மக்கள் நம்ப மாட்டார்கள். இனி வரும் எந்த தேர்தலிலும், இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.தன்னுடைய ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.,வுடன் குமாரசாமி சென்றிருப்பது வெட்கக்கேடான செயல். அக்கட்சி தலைவர்களுக்கு, மானம், மரியாதை இல்லை. இனி கர்நாடகாவில் ம.ஜ.த., இல்லாமல் போய்விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 4