உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷாவுக்கு பா.ஜ., தலைவர் நன்றி

அமித்ஷாவுக்கு பா.ஜ., தலைவர் நன்றி

கே.எம்.மார்க்:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா சந்தித்து நன்றி தெரிவித்தார்.டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.கடந்த 20ம் தேதி ராம்லீலா மைதானத்தில் புதிய பா.ஜ., அரசு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதனால் பா.ஜ., தலைவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பா.ஜ., மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா சந்தித்து, சட்டசபை தேர்தல் வெற்றிக்காக நன்றி கூறினார்.இந்த சந்திப்பு குறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து சச்தேவா வெளியிட்ட பதிவு:அமித்ஷாவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அவரது வழிகாட்டுதலும் தொலைநோக்குப் பார்வையும் வரலாற்றை தொடர்ந்து வடிவமைக்கின்றன.அவரது தலைமைத்துவம் மற்றும் சாணக்கியதனத்துக்கு சான்றாக, டில்லியில் பா.ஜ.,வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது.இதற்காக என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, அவரது ஆசீர்வாதங்களுக்கு நன்றி!இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி