உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திகார் சிறைக்கு வெளியே பா.ஜ., போராட்டம்

திகார் சிறைக்கு வெளியே பா.ஜ., போராட்டம்

திகார் கிராமம்:முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, திகார் சிறைக்கு வெளியே பா.ஜ., நேற்று போராட்டம் நடத்தியது.கலால் கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து நேற்று பா.ஜ., சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.தொண்டர்கள் மத்தியில் வீரேந்திர சச்தேவா பேசியதாவது:ஆட்சியும் நிர்வாகமும் முடங்கிவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் கைவிட வேண்டும். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.ஆம் ஆத்மி அரசின் எந்த அமைச்சரும் எந்தப் பிரச்னைக்கும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. அதிகாரிகள் மீது பழியைப் போடுவதில் மும்முரமாக உள்ளனர். ஊழல் புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. இந்த குழப்பமான சூழ்நிலையில் டில்லி மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை