உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் ராஜினாமா செய்ய பா.ஜ., நெருக்கடி: மாலிவால் விவகாரம்

முதல்வர் ராஜினாமா செய்ய பா.ஜ., நெருக்கடி: மாலிவால் விவகாரம்

புதுடில்லி:ஆம் ஆத்மி ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் தனது உதவியாளரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஜியா இல்மி கூறியதாவது:சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு திங்களன்று சென்ற ஸ்வாதி மாலிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார், தன்னைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டினார். ஆனால் இதுவரை காவல்துறைக்கு இன்னும் முறையான புகார் வரவில்லை.ஸ்வாதி மாலிவாலின் பாதுகாப்பு குறித்து எனக்கு கவலை ஏற்படுகிறது. குற்றச்சாட்டு கூறிய பின், மாலிவால் அமைதியாகிவிட்டார். அவர் மிரட்டப்பட்டு, ஒருவித சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, பிரியங்கா வத்ரா, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் மவுனம் காப்பது ஆச்சரியமளிக்கிறது.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் தான் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டார் என்பது வெளிப்படையானது. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் நான் நன்கு அறிவேன். கெஜ்ரிவால் உத்தரவிடாமல் அவரது வலது கையான பிபவ் குமார், ஸ்வாதியை அடித்திருக்க மாட்டார்.இது உண்மையில் மிகவும் தீவிரமானது. இதைப் பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவுபடுத்த வேண்டும். பிபவை ராஜினாமா செய்யும்படி கேட்க முடியாவிட்டால், தன் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி