உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி : ஆஜ்தக் கணிப்பு

ஒடிசாவில் பா.ஜ., ஆட்சி : ஆஜ்தக் கணிப்பு

புவனேஸ்வரம்:ஒடிசா சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என ஆஜ்தக் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்து உள்ளது.நடந்து முடிந்த பொது தேர்தலுடன் ஒடிசா மாநிலசட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பா.ஜ., 60-80 இடங்கள் வரையில் பெறக்கூடும் என தெரிவித்து உள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் நவீன் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 147 தொகுதிகளிலும், மன்மோகன் கமால் தலைமையிலான மாநில பா.ஜ, 147 தொகுதிகளிலும் , காங்., 145 இடங்களிலும் போட்டியிட்டது. கடந்த 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சி 112 இடங்களை பெற்றது.பா.ஜ.,23 இடங்களை பெற்று இரண்டாவது பெரிய கட்சியானது. காங்., 9 இடங்களை மட்டுமே வென்றது. மேலும் தற்போது வெளியாகி உள்ள கருத்துகணிப்பில் பா.ஜ.,வின் வாக்கு வங்கி 42 சதவீதம் அதிகரிக்கும் வேளையில் நவீன் கட்சிக்கு 42 சதவீத வாக்கு வங்கி சரியும் என தெரிவித்து உள்ள ஆஜ்தக் காங்., வெற்றிபெறும் தொகுதி 5-8 வரையில் கிடைக்க கூடும் என கணித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Indhuindian
ஜூன் 03, 2024 05:31

பாவம் நல்ல மனிதர் நேர்மையான ஆட்சி கொடுத்து மக்களுக்கு நல்லது செய்தார் கட்சியை தன்பக்கம் வைத்து காப்பாற்றினார் அனால் கட்சியில் வேறு யாரையும் வளர்த்து தயார் பின்னாலயே தனக்கு போட்டியா இருக்கறவங்கள அடையாளம் கண்டுகொண்டு கட் பண்ணி விட்டுட்டார


A1Suresh
ஜூன் 02, 2024 21:58

இப்படி எங்கள் பாஜக மாநில சட்டசபைகளிலும் வென்றால் மட்டுமே ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிட்டும். அப்பொழுதுதான் புதிய சட்டங்களை எளிதில் நிறைவேற்ற இயலும். வாழ்க பாரதம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை