உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: நட்டா நம்பிக்கை

மே.வங்கத்தில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: நட்டா நம்பிக்கை

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என அக்கட்சி தேசிய தலைவர் நட்டா கூறினார்.இது குறித்து நட்டா கூறியதாவது: மம்தா பானர்ஜியின் ஆட்சியில், ஷாஜகான் ஷேக் சந்தேஷ்காலியில் உள்ள பெண்களுக்கு எப்படி அச்சுறுத்தலாக இருந்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு சமூகவிரோதிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளனர். பெண்களின் மானம் மற்றும் கண்ணியம் காக்க சந்தேஷ்காலிக்கு சென்ற விசாரணை அமைப்பு அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

தகுந்த பதிலடி

மேற்கு வங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும். மேற்குவங்கத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை சி.பி.ஐ., கைப்பற்றியது. மம்தா பானர்ஜி அரசு எப்படி அராஜகத்தை பரப்புகிறது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மக்கள் மம்தா அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Nithya Ramachandran
ஏப் 29, 2024 10:50

இந்த கருத்தில் நான் உடன்படுகிறேன்


A1Suresh
ஏப் 28, 2024 23:22

மூங்கில் மரம் போல பாஜக செயல்படுகிறது பல வருடங்களுக்கு வேர் மட்டுமே நன்கு வளரும் தரைக்கு மேலே எந்த வளர்ச்சியும் தெரியாது பிறகு திடீரென சில நாள்களில் வெகு உயரமாக வளர்ந்து நிற்கும் அது போல இம்முறை வங்காளம் மற்றும் கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி புரியும்


K.n. Dhasarathan
ஏப் 28, 2024 14:18

என்னது? தொகுதியா? நல்ல கனவு போல எழுப்பி விடுங்கள்


A1Suresh
ஏப் 28, 2024 13:31

அஸஹாய சூரன், அநபாய சாகசன் என்று எங்கள் மோடிஜி நிரூபித்து வருகிறார்


Velan Iyengaar
ஏப் 28, 2024 11:44

கர்நாடகாவில் அடுத்த கட்டம் மொத்தமா ஊத்திக்கும் போலயே


SUBBU,MADURAI
ஏப் 28, 2024 13:42

அபசகுனமாக பேசாதீரும் ஏதோ பாவம் கொஞ்ச தொகுதியாச்சும் காங்கிரஸ் ஜெயிக்கட்டும்.


SUBBU,MADURAI
ஏப் 28, 2024 10:56

Phase 2 report is here Kerala : 20 -BJP 02. Karnataka : 14 -BJP/NDA 13. RJ : 13 -BJP 13. UP : 8 -BJP/NDA 8. MH : 8 -BJP/NDA 06. MP : 7 -BJP 07. Assam : 5 -BJP 4. Bihar : 5 BJP/NDA : 5. WB : 3 -BJP 2. CG : 3 -BJP 3. J


Velan Iyengaar
ஏப் 28, 2024 11:39

ஐயோ ஐயோ


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி