மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ராம்நகர்: ராம்நகர் சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, மாண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.தற்போது மத்திய கனரக தொழில் அமைச்சராக உள்ளார். எம்.பி., ஆனதால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சென்னப்பட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் போட்டியிடுவார் என்று, முதலில் தகவல் வெளியானது. ஆனால், சென்னப்பட்டணாவில் மகன் நிகிலை களமிறக்க, குமாரசாமி முயற்சி செய்கிறார். யோகேஸ்வரும் விட்டு கொடுக்க தயாராக இல்லை. இதனால் வேட்பாளரை தேர்வு செய்யும் விஷயத்தில், கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.சென்னப்பட்டணா தொகுதியில் இருந்து, ஐந்து முறை வெற்றி பெற்று இருப்பதால், தொகுதி மக்களை பற்றி நன்கு தெரியும் என்று, யோகேஸ்வர் கூறி வருகிறார். மேலும் தனது பலத்தை காட்டும் வகையில், சென்னப்பட்டணா அரசு கல்லுாரி மைதானத்தில், யோகேஸ்வர் நேற்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலை யோகேஸ்வரிடம், பா.ஜ., மேலிட தலைவர்கள் மொபைல் போனில் பேசினர். உடனடியாக டில்லி வரும்படி அழைத்தனர். இதனால் கூட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு, யோகேஸ்வர் டில்லி புறப்பட்டு சென்றார்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, யோகேஸ்வர் இன்று சந்தித்து பேசுகிறார்.சென்னப்பட்டணா வேட்பாளர் குறித்து, ஆலோசித்து இன்று முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
6 hour(s) ago | 2
11 hour(s) ago