உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இடஒதுக்கீட்டிற்கு எதிராக பா.ஜ., செயல்படுகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்கள், தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. இந்த 3 சமூக மக்களுக்கு ஜவஹர்லால் நேரு மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேலைகள் வழங்குவதில்லை.

ஒட்டுமொத்த தேசம்

15 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு வேலை வழங்கியுள்ளன. தற்போதைய அரசு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக செயல்படவில்லை. டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இந்தியாவின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. இவ்வாறு அகிலேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kalyan
ஜூன் 30, 2024 22:30

நல்ல வேலை இந்திய உலகக்கோப்பை அணியில் தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் , இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பாரசீகர்கள் இதர மதத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்காதது இவர் கவனத்திர்ற்கு வரவில்லை


dravida model
ஜூன் 30, 2024 20:42

நேர்மையாக உழைத்து வரி கட்டியவர்கள் பணத்தினை சுரண்டி இன்னும் எவ்ளோ காலத்துக்கு ஓட்டு வங்கி அரசியல் பண்ணுவிங்க


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 18:27

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை. அதை எதிர்த்து போராட்டம் நடத்தும் திராணியுண்டா? 370 விலக்கப்படும் வரை காஷ்மீரில் SC ST ஒதுக்கீட்டில்லை. அதனை அங்கு அமல்படுத்தியது பாஜக.


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2024 18:12

இட ஒதுக்கீடு ஏன் என்று ஒரு சிறிய அளவில் கூட ஆய்வு செய்து அறிந்து கொள்ளமாட்டாயா??? 77 வருடம் சுதந்திரம் அடைந்த பின்னும் இன்னும் இட ஒதுக்கீடு . 77 வருடம் என்பது மூன்று தலைமுறை என்று கொள்ளலாம். இன்னும் அவர்கள் நல்வழிகாணவில்லையெனில் அவர்கள் மதத்தில் இனத்தில் ஜாதியில் கோளாறு


GMM
ஜூன் 30, 2024 16:36

சாதி கலப்பு திருமணம், மத மாற்றம், மாநில மாற்றம், வெளிநாட்டு குடியுரிமை அங்கீகாரம் பெற்ற பின், சாதி இட ஒதுக்கீடு ஒரு அரசியல் மோசடி. இந்திய நகர்களில் சாதி இல்லை. கிராமங்களில் படிப்பு இல்லை. கல்வி, வேலையில் முதலில் அனைவருக்கும் போட்டி தேர்வு. அதன் பின் ஒதுக்கீடு பொது தேர்வின் அடிப்படையில். 47 க்கு பின் மக்கள் தொகை வளர்ச்சி, நாம் இருவர், நமக்கு ஒருவர் கோட்பாட்டின் படி எடுக்க வேண்டும், மத்திய பல்கலையில் மட்டும் பார்க்காமல், நாடு முழுவதும் ஜாதி, மத ஒதுக்கீட்டில் பயன் பெற்ற விவரம் முதலில் வெளியிட வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ