உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் மீது பா.ஜ., பாய்ச்சல்

காங்கிரஸ் மீது பா.ஜ., பாய்ச்சல்

பெங்களூரு: 'எக்ஸ்' எனும் சமூக வலைதளத்தில் பா.ஜ., வௌியிட்டுள்ள பதிவு: கன்னடர்களின் வரிப்பணத்தில், காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, சிறப்பு விமானங்களில் பயணம் செய்கிறார். வறட்சி நிவாரணம் வழங்க, வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க பணமில்லை. கலெக்ஷன் ஏஜென்ட் சுர்ஜேவாலா, தேர்தல் பிரசாரத்துக்கு சுற்றி வர, மாநில அரசு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. ஏ.டி.எம்., அரசு கொடுத்து அனுப்பும் பணத்தை, வேறு மாநிலங்களுக்கு தேர்தல் செலவுக்கு கொண்டு சென்று, பகிர்ந்தளிக்கும் பொறுப்பை சுர்ஜேவாலாவிடம் ஒப்படைத்துள்ளனரா?கன்னடர்கள் குடிக்க சொட்டு நீர் இல்லாமல் இறந்தாலும், அரசுக்கு கவலை இல்லை. ஆனால் கட்சி மேலிடத்தின் உத்தரவுபடி, கப்பம், காணிக்கை செலுத்தி அவர்களுக்கு சேவை செய்து, நாற்காலியை தக்கவைத்துக் கொள்வது, சித்தராமையா வின் நோக்கம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி