வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த குருவிகள் பின்னால் இருக்கும் வல்லூறுகளை கண்டறிய வேண்டும்.
பெங்களூரு : துபாயில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பார்வையற்ற நபரை, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் மார்ச் 6ம் தேதி பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. இதில் வந்த பயணியரிடம், கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதே விமானத்தில் வந்த பார்வையற்ற நபர் ஒருவரின் செயல்பாடு சந்தேகத்துக்கு இடம் அளித்தது. இவரை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, இவர் அணிந்திருந்த சட்டைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்நபரிடம் இருந்து 3.44 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.995 கிலோ தங்கச்செயின்களை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பார்வையற்றவர் என்பதால், இவரை பயன்படுத்தி தங்க கடத்தலில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என, கருதப்படுகிறது.தற்போது அவர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடிந்த பின்னரே, இவரது பின்னணியில் இருப்பது யார் என்பது தெரிய வரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குருவிகள் பின்னால் இருக்கும் வல்லூறுகளை கண்டறிய வேண்டும்.