உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வலுக்கு எதிராக  புளூ கார்னர் நோட்டீஸ்

பிரஜ்வலுக்கு எதிராக  புளூ கார்னர் நோட்டீஸ்

பெங்களூரு: பலாத்கார வழக்கில் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக, 'புளூ கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்க, சி.பி.ஐ., உதவியை நாட, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர் சில பெண்களுடன் ஆபாசமாக இருக்கும், புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.மாநில மகளிர் ஆணையம் கோரிக்கையின், சிறப்பு விசாரணை குழுவை, மாநில அரசு அமைத்தது. அதற்கு முன்பே பிரஜ்வல் ஜெர்மனி தப்பிச்சென்றுவிட்டார்.இதைத் தொடர்ந்து ஹொளேநரசிப்புராவில் உள்ள, ரேவண்ணா வீட்டில் வேலை செய்த, வேலைகாரப் பெண், ம.ஜ.த., பெண் பிரமுகர் உட்பட, இதுவரை பிரஜ்வல் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.லுக் அவுட் நோட்டீஸ்முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுமே ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வலுக்கு எதிராக, 'லுக் அவுட் நோட்டீஸை' எஸ்.ஐ.டி., பிறப்பித்தது.பிரஜ்வலுக்கு வழங்கப்பட்ட துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி இருந்தார்.இந்நிலையில் பிரஜ்வல், ரேவண்ணாவின் பாலியல் வழக்குகள் குறித்து விசாரிக்கும், எஸ்.ஐ.டி., அதிகாரிகளுடன், பெங்களூரு காவேரி இல்லத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசுகையில், ''பிரஜ்வல் ரேவண்ணாவை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வழக்கில் தாமதம், அலட்சியத்தை பொறுத்துக் கொள்ள முடியாது,'' என்றார்.இந்த வழக்குகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விளக்கினர். 'பிரஜ்வலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.உரிய நடவடிக்கை எடுத்து, அவரது கைது நடவடிக்கை மேற்கொள்வோம். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது இருப்பிடம் பற்றி தகவல் அறிய, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, இன்டர்போல் உதவியை நாட முடிவு செய்து இருக்கிறோம். இதற்கு சி.பி.ஐ.,யிடம் பேசுவோம்' என, அவர்கள் கூறினர்.துாதரக பாஸ்போர்ட் பயன்படுத்தி, பிரஜ்வல் ஜெர்மனி சென்றுள்ளார். அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 13 நாடுகளுக்கு, விசா இன்றி செல்ல முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.ஜெர்மனியில் அவரது இருப்பிடம் பற்றி அறியவும், அங்கிருந்து தப்ப முயன்றால் கைது செய்யவும் ஏதுவாக, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க எஸ்.ஐ.டி., முடிவு செய்து உள்ளது.விசாரணைக்கு ஆஜராகும்படி, பிரஜ்வல், ரேவண்ணா ஆகிய இருவருக்கும் மூன்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் ஆஜராகவில்லை. பிரஜ்வல் வெளிநாட்டில் இருக்கிறார். பிரஜ்வலுக்கு எதிராக தற்போது இரண்டாவது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளோம்.பரமேஸ்வர்,உள்துறை அமைச்சர்

நோட்டீஸ் என்பது...?

ஒரு வழக்கில் தேடப்படும் நபர் அல்லது குற்றங்கள் பற்றிய தகவல்களை, உலகளவில் பகிர்ந்து கொள்ள, 'இன்டர்போல்' பயன்படுத்தும் எச்சரிக்கை அறிவிப்பு தான், புளூ கார்னர் நோட்டீஸ். பிரஜ்வல் தற்போது எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்பதை அறிய, இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, சி.பி.ஐ., மூலம், எஸ்.ஐ.டி., கோரிக்கை அனுப்ப தயாராகிறது.பாலியல் வழக்கில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றதும், அவரை பற்றிய தகவல் அறிய, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி, இன்டர்போலுக்கு, சி.பி.ஐ., மூலம், கர்நாடக அரசு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை