உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சாணக்யபுரி: சாணக்யபுரி பகுதியில் ரயில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், வழக்கம்போல் வரும் மின்னஞ்சல்களை பார்த்த போது, மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி காலை 11:00 மணியளவில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வெடிகுண்டு கண்டறியும் குழு, செயலிழக்கும் படை, தீயணைப்பு படையினர் அருங்காட்சியகத்துக்கு விரைந்தன். தீவிர சோதனையில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோன்ற மின்னஞ்சல், மேலும் சில அருங்காட்சியகங்களுக்கும் அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.கடந்த மாதம் டில்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இதுபோன்ற பல மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இந்த வழக்குகளை சிறப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூன் 13, 2024 17:28

"தவறு கண்டேன் சுட்டேன், அவன்/அவள் சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டது" இந்த சட்டம் கொண்டு வந்தால் முதல் சில மாதங்களில் அங்கே இங்கே இப்படி நடந்தால் போதும் பிறகு சுத்தமாக எல்லா வித தவறுகளும் ஒரேயடியாக அடங்கிவிடும்.


வாய்மையே வெல்லும்
ஜூன் 13, 2024 10:09

வேற யாரு அமைதிக்கு பெயர் போனவர்களின் அடாவடி வேலை யாக தான் இருக்கும்


மேலும் செய்திகள்