அத்தை கொலை சிறுவன் கைது
மங்களூரு: தட்சிண கன்னடா, புத்துார் பிலிநுாரு கிராமத்தை சேர்ந்தவர் சைலேஷ். இவரது மனைவி ஹேமாவதி, 37. கடந்த 16ம் தேதி இரவு, வீட்டின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். புத்துார் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் ஹேமாவதி வீட்டில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்த 16 வயது சிறுவனிடம், போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் ஹேமாவதியை கழுத்தை நெரித்து கொன்றதை சிறுவன் ஒப்புக்கொண்டார். இதனால் அவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கைதான சிறுவனுக்கு, ஹேமாவதி அத்தை ஆவார்.கடந்த 16ம் தேதி இரவு, ஹேமாவதியை, சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு ஹேமாவதி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிந்துள்ளது.