லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய லஞ்ச ஊழியர்
தங்கவயல்: நில ஆவணம் வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மினி விதான் சவுதா ஊழியர், லோக் ஆயுக்தாவிடம் சிக்கினார்.தங்கவயல் மினி விதான் சவுதாவில் உள்ள 'ரிக்கார்ட் ரூம்' என்ற ஆவண பாதுகாப்பு அலுவலகத்தின் பொறுப்பாளராக பிலிப்ஸ் என்பவர் உள்ளார். இவரிடம், தொட்டகானஹள்ளியை சேர்ந்தவர் தியாகராஜன், தனக்கு சொந்தமான நில ஆவணங்களை கேட்டுள்ளார். இதற்கு அவர், 10,000 ரூபாய் கொடுத்தால் தான் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.நேற்று, 10,000 ரூபாயை பிலிப்ஸிடம் கொடுக்கும் போது, அங்கிருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கையும் களவுமாக அவரை பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.