உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திட்டங்கள், சலுகைகள் ஏராளம்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

திட்டங்கள், சலுகைகள் ஏராளம்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடில்லி ; பிரதமர் மோடி 3வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி அமைச்சர் நிர்மலா சந்தித்தார். பட்ஜெட் உரையை துவக்கியதும் எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர். பீகாருக்கு நீர்ப்பாசனம், தேசிய உணவுப்படுத்தும் மையம், புதிய விமான நிலையம் என கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் எதிர்கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தனிநபர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் ஊதியம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த வேண்டியது இருக்காது. நடுத்தர மற்றும் மாதாந்திர சம்பளதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாரமான் கூறியதாவது: உலகில் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் வேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை பெருக்க மாநில அரசுடன் இணைந்து கிராமப்புறங்களில் புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பருப்பு, காய், கனி உற்பத்தி பெருக்கப்படும். இந்த புதிய வேளாண் திட்டம் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரித்துள்ளோம். வரி, மின்சாரம், நிதி, சுரங்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை மையமாக கொண்ட பட்ஜெட். சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும். கிராமங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.நிதி அமைச்சர் நிர்மலா மேலும் அறிவித்த திட்டங்கள் விவரம் வருமாறு: * புதிய வருமான வரி மசோதா விரைவில் தாக்கல்*பீகார் மாநிலத்திற்கு கூடுதல் சலுகை திட்டம்*ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கு 5 ஆயிரம் கோடியில் திட்டம்*அரசு உயர் நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் மூலம் இணய வசதி*கூட்டுறவு, சிறு தொழில் நிறுவனத்திற்கு கூடுதல் கடன் உதவி*பட்டியலின பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம்*கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ. 5 லட்சமாக உயர்வு*அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை* அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக அதிகரிப்பு * மின்சார வாகனம், மொபைல் பேட்டரிக்கு வரி சலுகை* உயிர்காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு* ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை* தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டாக அதிகரிப்பு* வீட்டு வாடகை டி.டி.எஸ்., ரூ. 6 லட்சமாக உயர்வு. * மறைமுக வரியில் சீர்திருத்தங்கள்

New tax regime:

Up to Rs 4 lakh - 0%Rs 4-8 lakh - 5%Rs 8-12 lakh - 10%Rs 12-16 lakh - 15%Rs 16-20 lakh - 20%Rs 20-24 lakh - 25%Above Rs 24 lakh - 30%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
பிப் 01, 2025 19:46

தாம்பரம் டூ செங்கல்பட்டு 4 ஆம் தடம் ன்னு சொல்றாங்களே ..... அது மாதிரி பல திட்டங்கள் இருக்கும் .... ராணுவம், எல்லைப் பாதுகாப்பு க்கு மெயினா முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் ....


Haja Kuthubdeen
பிப் 01, 2025 19:19

தமிழ்நாட்டிற்கான திட்டம் எதுவுமே இல்லையா?????


Kasimani Baskaran
பிப் 01, 2025 19:19

ஓட்டு மட்டும் தீம்க்காவுக்கு போடுவோம்...


Haja Kuthubdeen
பிப் 01, 2025 20:02

தமிழ்நாடு திமுக சொத்தல்ல.,நீங்க சார்ந்துள்ள கட்சிக்குதான் ஓட்டு போடனும்னு சட்ட விதி உள்ளதா!!


Kasimani Baskaran
பிப் 01, 2025 21:00

"சார்ந்துள்ள கட்சிக்கு" - நான் கட்சிக்காரன் இல்லை. எது சரியோ அதற்கு ஆதரவு. திராவிடம் என்பது வெளங்காத கோட்பாடு. பகுத்தறிவு என்று ஆரம்பித்து இன்று அடிப்படை அறிவே இல்லாமல் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக உள்ள ஒரு கூட்டம் என்ற நிலையில் இருக்கிறது.


M Ramachandran
பிப் 01, 2025 14:41

அது சரி சோனியா குடும்பம் மற்றும் இங்கு தமிழ்நாட்டின் குடும்ப வாரிசுகள் மற்றும் தலைமகன் குடும்பமும் உலகெங்லும் பதுக்கி வைத்திருக்கும் நம் நாட்டிற்கு மீட்டு அரா ஏதவது உபாயம் பட்ஜெட்டில் வைத்திருக்கிறீர்களா


முருகன்
பிப் 01, 2025 18:54

குடும்பம் இல்லாமல் யாரும் இல்லை


Rajarajan
பிப் 01, 2025 13:27

விவசாயத்திற்கு தேவை அடிப்படை நீர் ஆதாரம். அது இல்லாமல், வெறும் தொழில்நுட்பத்தை வைத்து என்ன செய்வது ?? யானை கட்டி போராடித்த காலத்தில், கல்லணை கட்டிய காலத்தில், என்ன தொழில்நுட்பம் இருந்தது ?? இப்படி நான்கு சுவற்றில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டுவதை விட, தமிழக விவசாய சங்கங்களை நேரிடையாக அழைத்து குறைகளை தீர்த்தாலே போதும். இல்லையேல், தனியாரிடம் இந்த பொறுப்பை ஒப்படையுங்கள். பின்னர் பாருங்கள், விவசாயம் தமிழகத்தில் வேகமெடுப்பதை. தயவு செய்து, நாட்டின் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களுக்கும், அரசியல்வாதிகளை மட்டும் நம்பி எதையும் செய்யாதீர்கள். அது விழலுக்கு இறைத்த நீர் தான். அல்லது, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம் என்று, ஒரு வெளிப்படையான, திறந்தவெளி வெப்சைட் வையுங்கள். நாங்கள் பொதுநலவாதிகள் கருத்தை தெரிவிக்கிறோம். அனைத்து பொதுமக்களும் அதை பார்க்கட்டும். அவர்கள் முடிவு செய்யட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை