உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணிடம் அநாகரிகம் ;கேப் ஓட்டுனர் கைது

பெண்ணிடம் அநாகரிகம் ;கேப் ஓட்டுனர் கைது

கோனனகுன்டே : பெங்களூரு கோனனகுன்டே அருகில் உள்ள கல்யாண் நகரில் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் ஒருவர், தினமும் அதிகாலையில் பக்கத்து வீடுகளில் வசிக்கும் தோழிகளுடன் நடைபயிற்சி மேற்கொள்வார்.கடந்த 2ம் தேதி அதிகாலையில் வழக்கம் போல், தனது வீட்டின் அருகில் தோழிகளுக்காக காத்திருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த நபர், அப்பெண்ணின் கையை பிடித்து, வாயை பொத்தி, கட்டிபிடித்து, அநாகரிகமாக நடந்து கொண்டார்.அப்பெண் அந்நபரின் பிடியில் இருந்து விலகி, கூச்சலிட்ட போது, அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதை பார்த்த பெங்களூரு தெற்கு டி.சி.பி., லோகேஷ், அந்நபரை பிடிக்க உத்தரவிட்டார்.நேற்று அந்நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் சுரேஷ், 25. பல்வேறு நிறுவன ஊழியர்களை அழைத்து சென்று விடும், 'கேப்' ஓட்டுனராக உள்ளார்.பெங்களூரு தெற்கு டி.சி.பி., லோகேஷ் கூறுகையில், ''சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது, வழக்கு பதிவு செய்யாதது, சம்பவத்தின் தீவிரம் தெரியாமல் இருந்த உதவி எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்,'' என்றார்.பெங்களூரில் அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து, அநாகரீகமாக நடந்து கொண்ட 'கேப் ஓட்டுனர்' கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை