மேலும் செய்திகள்
கருணாநிதி மாடு பிடி வீரரா : சீமான் கேள்வி
2 hour(s) ago | 2
பல நோய்களுக்கு காரணம் செயற்கை உரம்: அமித்ஷா பேச்சு
2 hour(s) ago | 2
மூணாறு:கேரளாவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.இம்மாநிலத்தில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்.26ல் தேர்தல் நடக்கிறது. 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிகவும் அதிகமாக கோட்டயம் தொகுதியில் 14 பேரும், ஆலந்துார் தொகுதியில் மிகவும் குறைவாக 5 பேரும் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் காங்கிரஸ், இடது சாரி கூட்டணி, பா.ஜ. கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரம் ஓய்வதற்கு கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன் ஒவ்வொரு கட்சிகளும் எதிர், எதிரே திரண்டு ஆக்ரோஷமாக பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். அது 'கலாச கொட்டு' என அழைக்கப்படுகிறது. அந்த இறுதி நேர பிரசாரத்திற்கு கூட்டணியினர் தயாராக உள்ளனர்.மாநிலத்தில் மதுபான கடைகள், பார்களை இன்று மாலை 6:00 முதல் ஏப்.26 மாலை 6:00 மணி வரை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மின்வாரியம் சார்பிலான ஹைடல் சுற்றுலா மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக விடுமுறை அளிக்கப்படுவதால் ஏப்.26ல் ஹைடல் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 hour(s) ago | 2
2 hour(s) ago | 2