உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் குழந்தைகளுக்கு படுக்கை வசதியா: மந்திரி விளக்கம்

ரயிலில் குழந்தைகளுக்கு படுக்கை வசதியா: மந்திரி விளக்கம்

புதுடில்லி,'ரயில் பெட்டிகளில், 'பேபி பெர்த்' எனப்படும், குழந்தைகளுக்கான படுக்கைகளை நிறுவுவது குறித்து, அரசிடம் திட்டமுள்ளதா?' என, ராஜ்யசபாவில், பா.ஜ., - எம்.பி., சுமர் சிங் சோலங்கி நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து வாயிலாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் பயணத்தை எளிதாக்க, சோதனை அடிப்படையில், லக்னோ விரைவு ரயிலின் ஒரு பெட்டியில், இரண்டு கீழ் படுக்கைகளில், குழந்தைகளுக்கான படுக்கைகள் இணைக்கப்பட்டன. இதற்கு வரவேற்பு இருந்தாலும், லக்கேஜ்களை வைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், கால்களை நீட்டுவதில் பிரச்னை இருப்பதாகவும் பயணியர் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''இந்திய ரயில்வே நெட்வொர்க்கில், 2019- - 20 முதல் 2023- - 24 வரை, 100 வந்தே பாரத் சேவைகள் உட்பட, 772 ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன,'' என்றார். ''அனைத்து சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு பதிலாக, வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமாகுமா?'' என, ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''ஜூலை 29 நிலவரப்படி, மொத்தம், 102 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே உள்ள ரயில்களை மாற்றாமல், புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ