உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னா ஒரு வில்லத்தனம்; அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம்; சேட்டை வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்!

என்னா ஒரு வில்லத்தனம்; அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம்; சேட்டை வாலிபரை தட்டி தூக்கிய போலீசார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு வந்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர். பல லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு, விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 50க்கும் மேற்பட்ட தொட்டிகளில், கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.இது தொடர்பாக, நொய்டாவை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் கஞ்சா தோட்டத்தை வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கிரேட்டர் நொய்டா துணை கமிஷனர் சாத் மியா கான் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது. மீரட்டை சேர்ந்த ராகுல் சவுத்ரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anantharaman Srinivasan
நவ 13, 2024 13:26

அநியாயமா ஒரு விவசாயியை கைதி செய்துள்ளீர்கள். படித்த பட்டதாரி சுயதொழில் செய்து முன்னேற இந்தியா லாயக்கில்லை. கடத்திண்டு வந்தா தான் பிடிக்கிறீங்கன்னு சொந்தமா பயிர் செஞ்சேன். அப்பவும் ஜெயிலா.. ??


கந்தசாமி,மதகுபட்டி
நவ 13, 2024 19:36

அவரை தமிழகத்துக்கு கூட்டி வந்து அதை எப்படி பயிரிடுவது அதற்கு சொட்டு நீர் பாசன முறையை உபயோகிக்கலாமா யூரியா போன்ற ரசாயண உரங்கள் போடலாமா அல்லது இயற்கையான மண்புழு உரத்தை போட்டு செழிப்பாக வளர்க்கலாமா என்று பயிற்சியளிக்க சொல்ல வேண்டும் அதனால் கழக கண்மணிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விட்டு விவசாயம் செய்து கணிசமாக வருமானத்தை ஈட்டுவதற்கான நல்ல திட்டம்.


KavikumarRam
நவ 13, 2024 11:45

மாடல் அரசு மாதிரி ஒரு பத்து லட்சம் சன்மானம் குடுக்கலாம்


Ram pollachi
நவ 13, 2024 10:43

வீட்டில் எலி, பெருச்சாளி தொல்லை அதான் கஞ்சா செடியை வளர்த்தார் இது தவறா?


Pandi Muni
நவ 13, 2024 10:33

ராகுல்னு பெயர் இருந்தாலே தேச துரோக வேலைகள் கூடவே வந்திரும் போலருக்கு


Rajamani K
நவ 13, 2024 10:09

ராகுல் என்றாலே வில்லங்கம் போல. ....ராகுல் திராவிட், தவிர


Barakat Ali
நவ 13, 2024 10:08

கடுமையான தண்டனை தேவை .......


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 09:47

பாஜக ஆசாமிகள் யாரும் இந்த பக்கமே இன்னிக்கு வர மாட்டாங்க பாருங்க.


Barakat Ali
நவ 13, 2024 10:09

யோகியா அந்த வாலிபருக்கு விதை வழங்கினார் ?


Pandi Muni
நவ 13, 2024 10:32

திராவிட டெக்னிக் உலகம் முழுவதும் பரவி ...


comman indian
நவ 13, 2024 10:45

Barakat அலி : நீங்க சொன்னது போல யோகி வாங்கி தாரால , அது போல உங்க மொழில இந்தியா ல இருக்குற எல்லாரும் , நீங்க சொல்லுறது போல இல்ல ......


RAMAKRISHNAN NATESAN
நவ 13, 2024 14:03

பரக்கத், யோகி அந்த கஞ்சா வாலிபருக்கு விதை கொடுத்திருக்க மாட்டார்தான்.. ஆனால் டுமீல் நாட்டு மன்னர் குடும்பத்துடன் மெத் சாதிக்கிற்கு உள்ள உறவு எப்படிப்பட்டது?? திரைத்துறைக்கு அப்பணம் எப்படிப் பயன்பட்டது? மன்னர் குடும்பம் அவரால் பலனடைந்ததா? எப்படி? மத்திய அரசு ஏன் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டவில்லை இவை அனைத்துமே மில்லியன்... சாரி ...... பில்லியன் டாலர் கேள்விகள் ......


rasaa
நவ 13, 2024 09:43

ஒரு விஞ்ஞான விவசாயியை வீழ்த்திவிட்டார்கள்.


anoj267747
நவ 13, 2024 09:27

காவல் துறைக்கு வாழ்த்துக்கள்


anoj267747
நவ 13, 2024 09:19

என்ன இன்னும் எந்த கமெண்ட்ஸும் வரல?? ஓ ... உத்தர பிரதேஷ் மாநிலம் ..அப்போ சரி ..அப்போ சரி


சமீபத்திய செய்தி