உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுக்கு சங்கர் மீதான வழக்கு: கோவைக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்!

சவுக்கு சங்கர் மீதான வழக்கு: கோவைக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகளை கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இதில், தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சவுக்கு சங்கர், நீதிபதிகள், போலீஸ், பத்திரிகையாளர்கள் பற்றி அவதுாறு பேசுகிறார். அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கோரினார். விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது. இந்த குறிப்பிட்ட வழக்குகள், இது தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் பேசக்கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனையை சங்கர் மீறும் பட்சத்தில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Naveen Mano
பிப் 25, 2025 12:10

பின் எதற்கு மன்னிப்பு கேட்டான்


கோமாளி
பிப் 24, 2025 21:05

MP மச்சானாக இருக்கும் சவுக்குக்கே இந்த நிலைமை என்றால், சாதாரன தமிழனை இந்த திராவிட அரசு என்னவெல்லாம் செய்யும்


SADHIK ADAM
பிப் 25, 2025 09:25

வாய சும்மா வச்சிட்டு இருக்கனும்.ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது.


தாமரை மலர்கிறது
பிப் 24, 2025 21:00

திமுகவை எதிர்த்து வரும் சவுக்கு சங்கருக்கு மத்திய அரசும் கோர்ட்டும் ஆதரவாக இருக்கும்.


SADHIK ADAM
பிப் 25, 2025 09:27

அதான் தெரியுமே.மத்திய அரசு துணை நிக்குமே


K.Ramakrishnan
பிப் 24, 2025 18:57

மன்னிப்பு கேட்டாலும் இவரைப் போன்றவர்களை விடவே கூடாது. திமிராக பேசுகிற சங்கர், சீமான் போன்றவர்களை எல்லாம் காவலர்கள் சும்மா விட்டாலும், கண்ணியமிக்க நீதித்துறை விடவேகூடாது.


Ram Moorthy
பிப் 24, 2025 18:16

கோவைக்கு வழக்கு விசாரணை மாற்றம் அவ்வளவு பெரிய விஷயமா பெங்களூர் அல்லது குஜராத் மாநிலத்திற்கு மாற்றி இருக்கலாம்


Narayanan
பிப் 24, 2025 16:22

சவுக்கு சங்கர் மீது இருக்கும் வழக்குகள் அனைத்தும் புனையப்பட்ட வழக்குகள் . அவரின் உண்மையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளமுடியாத நிலையில் புனையப்பட்ட வழக்குகள் இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டியவை .


SADHIK ADAM
பிப் 25, 2025 09:31

இவன் பெரிய அரிச்சந்திரன்.புளுகுனி புரோக்கர் சங்கர்.இவனை எல்லாம் வெளியே விட்டதே தப்பு.உள்ளேயே வெச்சு பெடல் எடுக்கனும்


நீதிதேவன்
பிப் 24, 2025 15:49

முன்னாடியெல்லாம் தீர்ப்பை மாத்துவாங்க. இப்போ கோர்ட்டை மாத்துறாங்க.


Kasimani Baskaran
பிப் 24, 2025 14:49

திராவிடர்களையே முன்னேற்ற வந்த கட்சி ஒரு சாதாரண குமாஸ்தாவுக்கு பயப்படுகிறது...


Anantharaman Srinivasan
பிப் 24, 2025 14:41

குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது supreme court. குறிப்பிட்ட ஒரு வழக்கு என்ன வழக்கு ??


KavikumarRam
பிப் 24, 2025 16:16

பாலிடாயில் வாங்குனதுல ஊழல் செஞ்ச வழக்கா இருக்கும்.


sridhar
பிப் 24, 2025 16:56

மாற்றப்படாத வழக்கு தான் .


Ramesh Sargam
பிப் 24, 2025 14:05

அரசு தரப்பில் ஆஜராகும் வக்கீல் அண்ணா அவர்களே, உங்கள் துணை முதல்வர், அதான் அந்த உ. நிதி, தினம் தினம் பாரத பிரதமர் என்றும் மதிக்காமல், மோடி அவர்களை பற்றி எவ்வளவு இகழ்வாக பேசுகிறார். அது உங்களுக்கு சரி என்று தோன்றுகிறதா ???


MANIMARAN R
பிப் 24, 2025 15:34

நீங்கள் உங்கள் இஷ்டத்துக்கு தமிழக அரசை பற்றி பேசுகிறீர்கள் இது சரியா என்று யோசிக்கவும்


Suppan
பிப் 24, 2025 16:00

அது ராசா வீட்டு கன்னுகுட்டி . நாகரீகம் என்பது என்னவென்று புரியாத வெம்பிய பிஞ்சு . அதுபாட்டுக்கு கத்திக்கிட்டு கிடக்கட்டும்


Ray
பிப் 24, 2025 19:06

இவருக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது? மாமனா மச்சானா இவன் என்ன பங்காளியா? போட்ட கேசையே தள்ளுபடி செய்துட்டுது உச்ச நீதிமன்றம்


சமீபத்திய செய்தி