உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.,

திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையை அடுத்து இன்று சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது.மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டினை அமலாக்கத்துறை, மற்றும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.இதில் நடந்த பண மோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் கைது செய்தது. கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60njbe9z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கு ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் அவரது ஜாமின் மனுவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் இன்று திகார் சிறை சென்ற சி.பி.ஐ, அவரை கைது செய்தது.முன்னதாக நேற்று சி.பி.ஐ., கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் விசாரணை முடிந்த நிலையில் இன்று சிறையில் வைத்த கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை நாளை ஆஜர்படுத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

enkeyem
ஜூன் 26, 2024 09:33

இதோ அந்த விட்டாராய்யா சட்ட மாமேதை


pmsamy
ஜூன் 26, 2024 08:11

சிறையில் இருப்பவரை கைது செய்வீர்களா ? எவ்வளவு பெரிய அறிவாளிகள்.


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 05:19

ஒரு வழக்கில் ஜாமீன் என்றாலும் அடுத்த வழக்கில் உள்ளே தூக்கி வைக்க முடியும் என்பது நல்ல நடைமுறை. ஆக நீதிமன்றம் நினைத்தாலும், கருணை காட்டி பதவியில் இருக்கலாம் என்று சொன்னாலும் விசாரணை அமைப்புக்களும் மனது வைத்தால்தான் வெளியே உலவமுடியும்.


Bala
ஜூன் 26, 2024 02:35

தமிலுநாட்டில் எப்பொழு கைது?


தேச நேசன்
ஜூன் 26, 2024 00:32

இன்டி கூட்டணிக்கு நல்ல செய்தி நீங்க கூச்சல் போட்டெல்லாம் என்னை முடக்க முடியாது, நான் மோடி. இது வரை பார்த்தது எல்லாம் டிரைலர், இனிதான் மெயின் பிச்சர்ன்னு ஐயா முழங்கியதை செயல் படுத்த ஆரம்பிச்சுட்டார். அதுவும் புதிய பாராளுமன்றம் கூடிய இரண்டாவது நாளிளேயே, அடுத்து த.நா பக்கம் தான்.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 00:18

சபாஷ். இன்னும் ரெண்டு முதல்வர்கள் தமிழகம் மற்றும் மேற்குவங்க முதல்வரை சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவின் ஜனநாயகம் வலுக்கும். ஊழல் பெருத்துவிட்டது.


vaiko
ஜூன் 25, 2024 23:06

ஆட்சி கவிழ்ந்தவுடன் மோடி, அமித் மற்றும் நிர்மலாவை இப்படி அலைக்கழிக்க வேண்டும். மூவரும் சிறையை விட்டு வெளியே வர கூடாது.


naranam
ஜூன் 26, 2024 04:45

என்ன செய்ய, உங்க பெயர் பொறுத்தம் அப்படி. இப்படி புலம்ப மட்டுமே முடியும் உங்களால்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 14:44

நினைப்பது நடக்காது ராசா


SP
ஜூன் 25, 2024 22:49

வழக்குமேல் வழக்கு போட்டு, காலமெல்லாம் திகாரிலேயே இருக்கவேண்டும். அந்த அளவு ஆபத்தான நபர்.


vinod
ஜூன் 25, 2024 23:30

pavam delhi cm


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை