உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி - பைடன் பேச்சு மத்திய அரசு விளக்கம்

மோடி - பைடன் பேச்சு மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், அண்டை நாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:வங்கதேச மாணவர்களின் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பல கூட்டுத் திட்டங்களும் முடங்கிஉள்ளன. கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நம் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியபோது, இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இந்தியா தான் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டது குறித்தும் இருநாட்டு தலைவர்கள் பேசினர். இந்த விவகாரத்தில் இந்தியா அளித்த உண்மையான விபரங்களை புறக்கணித்து பொய்யான தகவல்களை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. நீர்வள மேலாண்மைக்காக இரு நாடுகளின் கூட்டு வழிமுறைகள் சரியான திசையில் செல்வது தொடர்பான தகவல்கள் புறக்கணிக்கப்பட்டு, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஆக 31, 2024 08:00

பைடனுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாத அளவுக்கு ஞாபக மறதி. இவர் என்ன பேசுனாரோ? அவர் என்ன பதில் சொன்னாரோ?


Kasimani Baskaran
ஆக 31, 2024 07:41

பாதி மட்டுமே வேலை செய்யும் இயந்திர மனிதன் பைடன். அவரிடம் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. டிரம்ப் ஆயிரம் மடங்கு திறமைசாலி என்பதை பைடன் நிர்வாகம் நிரூபித்து வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை