உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே வாரத்தில் 3 இந்தியர் கொலை கனடாவிடம் மத்திய அரசு அதிருப்தி

ஒரே வாரத்தில் 3 இந்தியர் கொலை கனடாவிடம் மத்திய அரசு அதிருப்தி

புதுடில்லி: வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ரூட்டோ குற்றஞ்சாட்டினார். இதை மத்திய அரசு மறுத்தது. இதையடுத்து இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, கனடாவில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது: கடந்த ஒரு வாரத்தில், கனடாவில் மூன்று இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவங்கள் குறித்த முழு விசாரணைக்காக, அங்குள்ள அதிகாரிகளுடன் நம் துாதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இந்தியர்கள், குறிப்பாக மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் பாதுகாப்பு குறித்து கனடா அதிகாரிகளிடம் நம் துாதரக அதிகாரிகள் கவலையும், அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !