தர்ஷனுக்கு நாற்காலி கழிப்பறை
பல்லாரி: சித்ரதுர்காவை சேர்ந்த தன் ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் சிக்கி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் சிறைக்குள் ரவுடிகளுடன் நாற்காலியில் அமர்ந்து, புகை பிடித்தபடி தர்ஷன் இருந்த படம் பரவியது.இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, பல்லாரி சிறைக்கு தர்ஷன் மாற்றப்பட்டார். சிறையை ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி., சேஷாவிடம், 'சிறையில் இந்திய அமைப்பில் கழிப்பறை உள்ளது. எனக்கு முதுகுவலி இருப்பதால், சர்ஜிக்கல் நாற்காலி கழிப்பறை வேண்டும்' என, தர்ஷன் கோரிக்கை விடுத்திருந்தார்.'தர்ஷனின் மருத்துவ குறிப்புகளை சிறை டாக்டர் ஆய்வு செய்து, தகவல் தெரிவித்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஐ.ஜி., சேஷா கூறியிருந்தார்.இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, பல்லாரி சிறை மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த பின், சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில், அவருக்கு, 'சர்ஜிக்கல்' நாற்காலி கொடுக்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நேற்று பல்லாரி சிறைக்கு, மாவட்ட மருத்துவமனை மருத்துவ ஊழியர்கள், 'சர்ஜிக்கல்' நாற்காலி எடுத்துச் சென்றனர்.